Paristamil Navigation Paristamil advert login

திட்டமிட்டால் திகட்டாத மகிழ்ச்சி

திட்டமிட்டால் திகட்டாத மகிழ்ச்சி

30 ஆடி 2013 செவ்வாய் 13:35 | பார்வைகள் : 10416


நிதி நிர்வாகம் என்பது வாழ்வில் முக்கியமான விஷயம். வரவு& செலவு விஷயத்தில் திட்டமிட்டுச் செயல்படுபவர்கள் என்றுமே திண்டாட வேண்டியிருக்காது. அவர்கள் திகட்டாத மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். நிதி விஷயத்தில் நிம்மதியை அனுபவிப்பதற்கான ஆலோசனைகள் உங்களுக்கும்...

 கடன்களை ஒழியுங்கள் வாழ்வில் விரைவாக முன்னேற்றம் காண விரும்புபவர் முதலில் செய்ய வேண்டியது, கடன்களை ஒழிப்பதுதான். கடன்களுக்கான வட்டிக்காக நீங்கள் மாதமாதம் எவ்வளவு செலவழிக்கிறீர்கள் என்று கணக்கிட்டாலே போதும். அதிலிருந்து மீள்வதற்கான உத்வேகம் பிறந்துவிடும்.

கடன்களுக்கான வட்டிகளில் இருந்து உங்கள் வருவாயை மீட்டால், சேமிப்பு உயரும். எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக நீங்கள் கடன்களில் இருந்து மீள்கிறீர்களோ, அவ்வளவு விரைவாக உங்களின் பொருளாதாரம் நலம் பெறும்.

கடன்களை உடனே ஒழிக்க முடியாது, ஆனால் பணமும் சேமிக்க வேண்டும் என்றால், முதலில் உங்கள் கடன்களை ஒழுங்குபடுத்துங்கள். அதிக வட்டி கொடுக்க வேண்டியிருக்கும் தனிநபர் கடன், கந்துவட்டிக் கடன் போன்ற கடன்களை முதலில் முடித்துவிடுங்கள்.

முடிந்தால், வட்டியில்லா கடன்களுக்கு (உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து பெறுபவை), அல்லது குறைந்த வட்டிக் கடன்களுக்கு அவற்றை மாற்றிக்கொள்ளுங்கள். கடன்களில் இருந்து மீள்வதற்கான ஒரு வழி, ஒரு அவசர கால நிதியை உருவாக்குவது.

இந்த நிதியைப் பயன்படுத்தி ஒன்றி ரண்டு மாதங்களை ஓட்டினால், வரும் வருவாயை கடன்களைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தலாம். நீங்கள் இதுவரை அவசர கால நிதியை வளர்க்கத் தொடங்கவில்லை என்றால், உடனே அதைத் தொடங்குங்கள்.

தேவைகள் இல்லாத மனிதர்கள் இல்லை. ஆனால் நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு பொருளாதார பலம் அவசியம். பொருளாதார விஷயத்தில் குறுகியகால இலக்குகள், நீண்டகால இலக்குகள் என்று திட்டமிட்டால் நமது தேவைகளை எளிதில் நிறைவேற்றிவிடலாம். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்