Paristamil Navigation Paristamil advert login

ஆண்கள் பெண்களுக்கு கொடுக்கும் தொல்லைகள்............

ஆண்கள் பெண்களுக்கு கொடுக்கும் தொல்லைகள்............

25 ஆடி 2013 வியாழன் 13:06 | பார்வைகள் : 10165


 ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் விரும்பத்தக்க உறவாக இருப்பது காதலன், கணவன் என அவர்களது வாழ்க்கையில் வரும் ஒரு ஆணின் உறவு மட்டும் தான். அப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அங்கம் வகிக்கும் ஆண்களுக்கு, மூர்க்கத்தனம் நிறைந்த மற்றொரு பக்கமும் இருக்கிறது. 

 
காதலும், மூர்க்கத்தனமும் ஒரு சேர நிறைந்த ஆண்கள், தாங்கள் பெரிதும் விரும்பும் பெண்களுக்கே கூட தங்களுக்கே தெரியாமல் பலவகைகளில் கொடுமைகள் புரிவதில் வல்லவர்கள். அப்படி ஆண்கள், பெண்களுக்குச் செய்யக்கூடிய 10 கெட்ட விஷயங்களை என்னவென்று பார்க்கலாம். 
 
• ஆண்கள் அனைவருமே பெண்களின் மார்புகளை கடைக்கண்ணில் பார்க்கும் வழக்கமுடையவர்கள் என உலகெங்கிலும் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. ஆனால் அப்படி ஒரு பெண்ணைப் பார்த்து, ‘ஜொள்' வடிக்கும் போது தர்ம சங்கடத்திற்கு உள்ளாவது, அவர்கள் பார்க்கும் பெண் மட்டுமல்லாது, அவர்கள் அருகில் இருக்கும் பெண்ணும் தான்! காதலியுடன் வெளியில் செல்லும் தருணங்களில் கூட, ஆண்கள் பிற பெண்களை பார்க்காமல் விடுவதில்லை! 
 
• அநேகமாக ஆண்கள், பெறாமை குணம் இருக்கும். பெண்கள் மிகுந்த பொறாமைக் குணம் உடையவர்கள் என குற்றம் சொல்லும் ஆண்கள், தங்கள் காதலி வேறொரு ஆணைப் பற்றி பேசினால் கூட உச்சக்கட்ட பொறாமை கொள்கிறார்கள். 
 
• மிகவும் சுதந்திரமான, நவநாகரீகமான பெண்ணுடன் பழகுவதே பெரும்பாலான ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் தாய்க்கு அறிமுகம் செய்யும் சமயங்களில் அடக்கமான பெண்களையே விரும்புவார்கள். ஊர் சுற்றும் போது நவநாகரீகமான உடைகளை அணிவதையும், வித்தியாசமான சிகையலங்காரத்தையும் விரும்பியவர்கள், திருமணத்தின் போது மட்டும் நேர்மாறான பெண்களைத் தேடுவது தான் ஆண்களின் மோசமான செயல்களிலேயே முதன்மையானது! 
 
• மனைவி வீட்டை விட்டு வெளியே கால் வைத்ததிலிருந்து, "எங்கே இருக்கிறாய்?" என நச்சரித்துக் கொண்டே இருக்கும் கணவனின் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் வரும். ஆண்களின் இந்த அளவுக்கு அதிகமான அக்கறை பெண்களுக்கு ஒரு கட்டத்தில் எரிச்சலாக மாறிவிடுகிறது. 
 
பெண்களின் வாழ்க்கையில் ஆண்கள் வருவதற்கு முன்பும், இந்த உலகில் பெண்கள் கவனமாகத் தான் வாழ்ந்தார்கள் என்பதை ஆண்கள் உணருவதே கிடையாது. இதைப் படிக்கும் போதாவது சில ஆண்கள் திருந்தினால் சரி. 
 
• பெண்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்கள் என்றாலும், ஆண்களைப் போல் அல்லாது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரும் விஷயங்களை செய்வதில் வல்லவர்கள். ஆண்கள் பெண்களின் உணர்வுகளை கிண்டலடிப்பதை நிறுத்திவிட்டு, அதற்கு மதிப்பு கொடுக்க ஆரம்பித்தால், வாழ்வில் சிறப்பாக வாழ்வது நிச்சயம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்