மழை வேண்டி...!

15 மார்கழி 2019 ஞாயிறு 13:09 | பார்வைகள் : 12949
கொட்டும் மழையில்,
சொட்டும் துளியில்,
பட்டுக் குடையோடு
பயணிக்கிறாய் நீ...
குடையின் நுனிவழியே,
நுழைந்து உள்ளே வரும்
மழைத்துளியோ - உன்
கன்னத்தை தொட்டு
காதல் செய்கிறது...!
குறுகுறுவென பார்க்கும்
குடையோ - உன்
கைவிரலின் தொடுதலோடு
இறைவனோடு
வேண்டிக்கொண்டிருந்தது...!
இவள் பயணங்களிலெல்லாம்
மழை வேண்டுமென...
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025