58வது அகவை
26 கார்த்திகை 2012 திங்கள் 08:46 | பார்வைகள் : 10418
58வது அகவை காணும்
ஈழத்தின் அரும் புதல்வனே கரிகாலா
ஆண்டாண்டு காலமாய் ஆண்டு வந்த
தேசத்தை ஆண்டிட வா தலைவா.
ஆயிரம் அந்நியர் உமை எதிர்த்திடலாம்
அழியாது உம் புகழ் பாரினிலே
ராஜ கோபுரமாய் உயர்ந்த எம் தலைவா
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்
பெரும்பாண்மை என பெரும் சீற்றம் கொள்ளும்
பேரினவாதத்தை அழித்திட வா
அழிந்தது பயங்கரவாதம் என அறிவிப்போருக்கு
பதுங்கும் புலி பாயும் என பறை சாற்றிட வா
போன வழி மாறலாம் அனால்
போகும் வழி மாறாது
ஆழ்கடலில் அலை ஓய்ந்தாலும்
பாயும் புலியின் சீற்றம் அடங்காது
முள்ளிவாய்க்கால் எல்லாம் முடிவல்ல
எம் வாழ்வில்
மீண்டும் எழுவோம் புதியதோர் பூகம்பமாய்
புறப்பட்டு தலைவனே புயலாக
கடற்படை தரைப்படை வான்படை என
முப்படையின் தலைவனே பிரபாகரா
எப்படை வரினும் அப்படை வென்று
எம்படை வெல்ல துணிவாய் பிரபாகரா
சாகவில்லை எம் தலைவன்
சரித்திரம் படைப்பான் தரணியிலே
மரணிக்கவில்லை எம் தலைவன் என
மார்தட்டி சொல்கிறோம் தமிழர் நாம்
தழிழர் கண்ணீர் துடைக்க வந்த தலைவனே
நீ சுட்டும் திசையில் செல்ல புறப்படுவோம் தமிழர் நாம்
காட்டி கொடுத்திட்ட கயவரை கொன்றிடுவோம்
கரிகாலன் படையில் இணைந்திடுவோம்
நாகரீக வாழ்க்கையல்ல நம் வாழ்வு
நமக்கென வேண்டும் ஒரு தனிநாடு.
அதற்கென போராடுவோம் ஒன்றிணைவோம்
புறப்படுவோம் புதியதோர் பாதையில்
தமிழர் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லுடா
புலம்பெயர் தமிழினமே புறப்படு போரிட
புதியதோர் ஈழம் படைப்போம்
எமக்கென ஒரு நாடு வேண்டுமென
தன்னுயிரை தியாகம் செய்த
மண்ணில் மடிந்த மாவீர செல்வங்களின்
கனவை நனவாக்கிடுவோம்
மாவீரர் கனவு நனவாக
தலைவனின் புதிய அகவையிலே
தமிழீழம் பெறுவோம்
இது தலைவன் மேல் உறுதி .
தமிழீழத்தில் இருந்து கவிப்பிரியா