மரணத்தின் பின்னால்...
30 மார்கழி 2011 வெள்ளி 17:02 | பார்வைகள் : 11074
மனித சிந்தனைக்கு
அப்பாலும் சில
புதிய தேடல்கள்
விரிந்தே கிடக்கின்றது
சிலரது ஒரு நாள்
ஒரு சரித்திரம்!.
சிலரின் வாழ்நாள்
முழுவதும் சூனியம்.
வாழும் போது தெரியாத
வாழ்வின் தத்துவம்
இறுதி மூச்சில்
மரணம் எனும்
வேள்வியில் உணர்கிறான்
மனிதன்!
மரணத்தை தெரிந்த
மனிதர்கள்
வாழ்கின்ற போதே
வளர்கின்றனர்.
மாலையில் மரணிப்போம்
என அறிந்துதான்
மலர்கள் மகிழ்சியாய்
இதழ் விரிக்கின்றன..
கடலோடு கலந்திடுவோம்
என அறிந்தும்
சலனமின்றி சலசலத்து
ஆறுகள்
மகிழ்ச்சியாய்
கடலினை முத்தமிடுகின்றன..
இறப்பை உணர்ந்து
இருக்கின்ற காலத்தை
இன்பமாய் கழிக்கும்
இயற்கையின் லாபவம்
மனிதனுக்கு
பிடிபடுவதே இல்லை என்பதே
துரதிஷ்டம்...