Paristamil Navigation Paristamil advert login

ஈராக்கில் 5,000 ஆண்டு பழமையான உணவகம் கண்டுபிடிப்பு

ஈராக்கில் 5,000 ஆண்டு பழமையான உணவகம் கண்டுபிடிப்பு

19 மாசி 2023 ஞாயிறு 09:38 | பார்வைகள் : 7836


கிட்டத்தட்ட 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய தெற்கு ஈராக்கில் உள்ள ஒரு உணவகத்தின் இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு உலகின் முதல் நகரங்களில் அன்றாட வாழ்க்கை குறித்து அறிய பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் பண்டைய ஈராக்கின் சுமேரிய நாகரிகத்தின் ஆரம்பகால நகர்ப்புற மையங்களில் ஒன்றாக அறியப்பட்ட சமகால நகரமான நசிரியாவின் வடகிழக்கில், பண்டைய லகாஷ் இடிபாடுகளில் ஒரு அமெரிக்க-இத்தாலிய குழு ஆராய்ச்சி நடத்தியது .

தற்போது அல்-ஹிபா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நகரம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறியுள்ளது.

அகழ்வாராய்ச்சியைத் தொடர்ந்து, ஆராய்ச்சியாளர்கள் உணவு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு திறந்த முற்றத்தைக் கண்டுபிடித்தனர்.

அதனுடன் பஞ்சுகள், ஒரு அடுப்பு, பண்டைய உணவு நினைவுச் சின்னங்கள் மற்றும் நவீன கால பிரிட்ஜுடன் ஒப்பிடும் வகையிலான 5,000 ஆண்டுகள் பழமையான ஈரப்பதம் கொண்ட அமைப்பு கண்பிடிக்கப்பட்டது.

உணவை குளிர்ச்சியாக வைத்திருக்க இது பயன்படுத்தப்பட்டதாக அகழ்வாராச்சியினர் தெரிவித்துள்ளனர்.

மீனின் எச்சங்கள் அடங்கிய கூம்பு வடிவ கிண்ணங்களையும் அகழ்வாராய்ச்சிக்குழு கண்டுபிடித்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு பரிமாற பயன்படுத்தப்படும் நூற்றுக்கணக்கான பாத்திரங்கள், மக்கள் அமரும் பெஞ்சுகள் ஆகியவையும் உள்ளது.

மக்கள் சாப்பிட வரக்கூடிய இடம் என்றும் அது வீடு இல்லை எனவும் கூறிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பீர் குடிப்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்தனர்.

அப்பகுதியில் தோண்டப்பட்ட கோயில்களில் ஒன்றில் பீர் செய்முறை கண்டுபிடிக்கப்பட்டது.

அருங்காட்சியகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் பாக்தாத்தில் உள்ள பழங்கால மற்றும் பாரம்பரிய மாநில வாரியம் ஆகியவற்றின் கூட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2019 ஆம் ஆண்டில் அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

அங்கு அவர்கள் புதிய நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். தரவு மற்றும் தகவல்களைப் பாதுகாப்பதற்கான ட்ரோன் புகைப்படம் மற்றும் மரபணு பகுப்பாய்வு ஆகிய தொழிநுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்