பூமியின் மேற்பரப்பின் 100 மைல்களுக்கு கீழ் புதிய பாறை அடுக்கு கண்டுபிடிப்பு
8 மாசி 2023 புதன் 08:54 | பார்வைகள் : 7222
பூமியின் மேற்பரப்பில் இருந்து 100 மைல்களுக்கு கீழே புதிய பாறை அடுக்கு ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியின் உள் மையத்தின் வேகம் குறைவதைத் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த புதிய அடுக்கு இருப்பது தெரியவந்துள்ளது.
உருகிய பாறைகளால் ஆன இந்த அடுக்கு பூமியின் உள்பகுதியில் 44 விழுக்காடு பகுதியை ஆக்ரமித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அடுக்கு ஏற்கனவே இருக்கும் மென்பாறைக் கோளத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என கூறும் விஞ்ஞானிகள், இது டெக்டோனிக் தட்டுகளின் கீழ் அமைந்துள்ளதாகவும், பாறைத்தட்டுக்களை நகர்த்தும் தன்மை கொண்டதால் பூமிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.