Paristamil Navigation Paristamil advert login

அவ்வப்போது தோற்றத்தை மறைத்துக்கொள்ளும் அபூர்வ கண்ணாடி தவளை கண்டுபிடிப்பு!

அவ்வப்போது தோற்றத்தை மறைத்துக்கொள்ளும் அபூர்வ கண்ணாடி தவளை கண்டுபிடிப்பு!

4 தை 2023 புதன் 11:48 | பார்வைகள் : 10498


தென், மத்திய அமெரிக்காவில் சில தவளைகளிடம் அதிசயமான ஆற்றல் ஒன்று இருக்கின்றது.
 
அவற்றால் தனது தோற்றத்தை மறைத்துக்கொள்ள முடியும்.
 
பகலில் தூங்கக்கூடிய அவை வழக்கமாகப் பச்சை இலையின் பின்புறத்தில் தொங்கிக்கொண்டு தான் தூங்கும்.
 
அப்போது அதன் தோல் ஒளிபுகும் நிலைக்கு மாறிவிடும்.
 
அது இலையின் பச்சை நிறமாகக் காட்சியளிக்கும்.
 
மற்ற நேரங்களில் அது செம்மண்ணிறமாக இருக்கும்.
 
தோல் ஒளிபுகும் நிலைக்கு மாறுவது தவளையின் பாதுகாப்பிற்காகவே என்று தெரிவிக்கப்பட்டது.
 
ஆனால் அது எப்படிச் சாத்தியமாகும்?
 
தவளைகள் தூங்கிக்கொண்டு இருக்கும்போது அவற்றின் கல்லீரலில் உள்ள சிவப்பு ரத்த உயிரணுக்களில் 90 விழுக்காட்டை அவை மறைப்பதாகத் தெரிய வந்துள்ளது.
 
அவற்றின் தோல் ஒளிபுகக்கூடியவை என்பதால் உடலில் ஓடும் ரத்தம்தான் நிறம் தருகின்றது.
 
மேலும் அவை உள்ளுறுப்புகளைச் சுருக்கி ஒன்றாக வைத்துக்கொள்கின்றன.
 
ஆனால் அவை எப்படிச் சிவப்பு ரத்த உயிரணுக்களை மறைக்கின்றன என்பது தெரியவில்லை.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்