கடைசி டாஸ்மேனியன் புலி - 85 ஆண்டுகளுக்குப் பின் கண்டெடுக்கப்பட்டன உடற்பாகங்கள்

6 மார்கழி 2022 செவ்வாய் 12:48 | பார்வைகள் : 11426
உலகில் உயிர்வாழ்ந்த கடைசி டாஸ்மேனியன் புலியின் (Tasmanian tiger) உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவை 85 ஆண்டுகளுக்கு முன் காணாமற்போனதாக நம்பப்பட்டது. ஆனால் அவை ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருந்த அலமாரியில் கண்டெடுக்கப்பட்டன.
புலி ஹோபார்ட் விலங்குத்தோட்டத்தில் 1936ஆம் ஆண்டில் மாண்டது. அதன் உடற்பாகங்கள் உள்ளூர் அருங்காட்சியகத்துக்கு அளிக்கப்பட்டன.
அந்த டாஸ்மேனியன் பெண் புலியின் எலும்பு, தோல் ஆகியவற்றுக்கு என்ன ஆனது என்பது குறித்து நீண்டகாலமாக மர்மம் நிலவியது.
அவை வீசப்பட்டதாக முதலில் நம்பப்பட்டது. புதிய ஆய்வின்மூலம், அந்த உடற்பாகங்கள் அருங்காட்சியகத்தில் இருந்தது தெரியவந்தது.