பிரேசில் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஏலியன் எலும்புக்கூடு.?
4 மார்கழி 2022 ஞாயிறு 13:31 | பார்வைகள் : 7827
பிரேசில் கடற்கரையில் கை போன்ற பெரிய மர்ம எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது மனிதருடையது அல்ல என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
லெடிசியா கோம்ஸ் சாண்டியாகோ மற்றும் அவரது காதலன் தேவனிர் சோசா ஆகிய ஜோடி பிரேசிலின் சாவோ பாலோ மாகாணத்தில் உள்ள இல்ஹா காம்ப்ரிடாவில் கடற்கரை மணலில் விசித்திர எலும்புக்கூடு பார்த்து அச்சமடைந்துள்ளனர்.
அதற்கு காரணம் அவர்கள் கண்டது, மனிதருடைய கை போன்று ஆனால் பெரிய அளவில் இருக்கும் எலும்புக்கூடு, நீண்ட விரல்களைக் கொண்ட எலும்பு. அவர்கள் “இது என்ன விலங்கு என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் இது வேற்று கிரகவாசியின் எலும்புக்கூடாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
ஒருவர் இது டைனோசரின் எலும்பாக இருக்கலாம் என்று கூறினார், மற்றொருவர் இது கடற்கண்ணியுடையது என்றார். இன்னொருவர் உயிரியலாளரிடம் கொண்டு செல்வோம் என்றார். கடல் உயிரியலாளர் எரிக் கோமின், இது செட்டேசியன் (கடல் பாலூட்டிகள்) டால்பின்கள், திமிங்கலங்கள் போன்றவற்றின் எலும்பாக இருக்கலாம் என்றார். இது 18 மாதங்களுக்கு முன் இறந்திருக்கலாம் என்றும் கூறினார்.
இருந்தாலும் மேற்கொண்டு சோதனை செய்து இந்த எலும்பு எதனுடையது என்பதை துல்லியமாகக் கூறிவிடலாம் என்று கோமின் கூறினார்.