Paristamil Navigation Paristamil advert login

4 ஆண்டுகளுக்குபின் பிறந்துள்ள ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் பற்றி தெரியுமா?

4 ஆண்டுகளுக்குபின் பிறந்துள்ள ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் பற்றி தெரியுமா?

14 கார்த்திகை 2022 திங்கள் 15:06 | பார்வைகள் : 6936


இங்கிலாந்து உயிரியல் பூங்காவில் அழியும் நிலையில் உள்ள ஒரு கொம்பு காண்டாமிருக இனத்தைச் சேர்ந்த ஆஷா என்ற காண்டாமிருகம், ஒரு பெண் குட்டியை ஈன்றது.

 
ஐக்கிய இராச்சியம் இங்கிலாந்தில் உள்ள செஸ்டர் விலங்கியல் பூங்கா. 15 வயது காண்டாமிருகமான ஆஷா, அக்டோபர் 14ஆம் தேதி பெண் குட்டி ஒன்றைப் பெற்றெடுத்ததாகவும், அந்தச் சம்பவம் தாய் காண்டாமிருகத்தின் கூண்டில் இருந்த கேமராவில் படம்பிடிக்கப்பட்டதாகவும் மிருகக்காட்சிசாலையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF) படி , காடுகளில் வெறும் 4,000 பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் மட்டுமே உள்ளன. ஒரு காலத்தில் நேபாளம் மற்றும் இந்தியா முழுவதும் பரவலாக இருந்தன. ஆனால் அவை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வேட்டையாடப்பட்டதால் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டன.
 
ஆனால் இந்திய மற்றும் நேபாள அரசாங்கங்களின் பாதுகாப்பு முயற்சிகள் இனங்களின் எண்ணிக்கையை 300 இல் இருந்து 3,000 ஆக உயர்த்தியுள்ளது என்று WWF கூறுகிறது. அது தவிர்த்து 1000 ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் வெவ்வேறு நாட்டின் உயிரியல் பூங்கா, சரணாலயங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை "பாதிக்கப்படக்கூடியது" என்று சிவப்புப் பட்டியலில் வகைப்படுத்துகிறது. அதாவது அவை "காடுகளில் அழிந்துபோகும் அபாயத்தில்" உள்ளன என்று பொருள்.
 
16 மாத கர்ப்பத்திற்குப் பிறகு ஆஷாவுக்குப் பிறந்த ஒரு பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகக் குட்டியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தலைப்பிட்டு இந்த அழகான காண்டாமிருகத்தின் வீடியோவை செஸ்டர் மிருகக்காட்சிசாலையின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் புதன்கிழமை பகிர்ந்தது.
 
இதையும் படிங்க..  85 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த அமெரிக்க பயணியின் கேமராக்கள்.. புதைந்திருக்கும் பொக்கிஷம் - கனடாவின் பனிமலையில் மீட்பு
 
செஸ்டர் மிருகக்காட்சிசாலையில் 4 ஆண்டுகளுக்கு பிறக்கும் ஒரு பெரிய காண்டாமிருகக் குட்டி இது. இன்னும் பெயரிடப்படாத குட்டி அக்டோபர் 14 அன்று பிறந்தபோது 50 கிலோகிராம் அல்லது சுமார் 110 பவுண்டுகள் எடையுடன் இருந்தது.
 
மிருகக்காட்சிசாலையானது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காண்டாமிருக குட்டிக்கு துலி, ஜியா மற்றும் பஹுலா ஆகிய மூன்று பெயர்களில் எதை வைக்கலாம் என்று வாக்களிக்க ரசிகர்களை அழைத்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்