Paristamil Navigation Paristamil advert login

எகிப்து கல்லறையில் 2600 ஆண்டுகள் பழமையான சீஸ் - அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

எகிப்து கல்லறையில் 2600 ஆண்டுகள் பழமையான சீஸ் - அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

27 புரட்டாசி 2022 செவ்வாய் 16:48 | பார்வைகள் : 7864


தொல்லியல் கண்டுபிடிப்புகள் வரலாற்றின் வேர்களை அறிய பெரிதும் உதவுகின்றன. இந்தக் கண்டுபிடிப்புகளால் இதுவரை வரலாறு தொடர்பான பல தகவல்கள் கிடைத்துள்ளன. ஹரப்பா நாகரீகமாக இருந்தாலும் சரி, மெசபடோமியாவின் சரித்திரமாக இருந்தாலும் சரி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளால்தான் அவை பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

 
இம்முறை எகிப்தில் தொல்லியல் நிபுணர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் கிடைத்த பொருள் அனைவரும்  ஆச்சர்யத்தில் அழ்த்தியுள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான பலாடைக்கட்டிடுகள் எகிப்திய கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த  பாலாடை கட்டிகள் 2600 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.  பாலாடை கட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீடுகளில் வைக்கப்படும் பாலாடைக்கட்டி இரண்டு மூன்று நாட்களுக்குள் கெட்டுவிடும். ஆனால், இங்கே  2600 ஆண்டுகள் பழமையான பாலாடைக்கட்டி கிடைத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
எகிப்தில் காணப்படும் பழைய பாலாடைக்கட்டி ஒரு மண் பானையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பானையின் மீது பண்டைய மொழியில் எழுதப்பட்டுள்ளன. இந்த பாலாடைக்கட்டி, ஆடு மற்றும் செம்மறி ஆட்டின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எகிப்தில் பாலாடைக்கட்டி ஹலோமி என்று அழைக்கப்படுகிறது. ஆடு மற்றும் செம்மறி பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீர் சுவையில் லேசான உப்புத்தன்மை கொண்டது. இந்த பாலாடைக்கட்டி எகிப்தின் 26 அல்லது 27 வது பேரரசின் காலத்தைச் சேர்ந்தது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
 
முன்னதாக, பாதம்ஸ் கல்லறையில் 3200 ஆண்டுகள் பழமையான பாலாடைக்கட்டி கண்டுபிடிக்கப்பட்டது. இது இதுவரை தயாரிக்கப்பட்ட பழமையான பாலாடைக்கட்டி என்று கருதப்படுகிறது.
 
இந்த பாலாடைக்கட்டி எகிப்தில் உள்ள சக்காரா கல்லறையில் உள்ளது. சக்காராவில் நீண்ட நாட்களாக அகழாய்வு பணி நடந்து வருகிறது. பாலாடைக்கட்டிக்கு முன்பே இந்த கல்லறையில் மேலும் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சக்கரா மயானத்தில் 4500 ஆண்டுகள் பழமையான சூரியன் கோயிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடவுள் மற்றும் தெய்வங்களின் சிலைகள், பழைய கல்லறைகள் மற்றும் சவப்பெட்டிகளும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான சக்காரா, எகிப்து பிரமிடுகளில் இருந்து 15 மைல் தொலைவில் உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்