Paristamil Navigation Paristamil advert login

பிரிட்டனின் அத்திப்பட்டி போன்று மாயமான கிராமத்தை வெளிகொண்டு வந்த வெப்பம்

பிரிட்டனின் அத்திப்பட்டி போன்று மாயமான கிராமத்தை வெளிகொண்டு வந்த வெப்பம்

26 ஆடி 2022 செவ்வாய் 19:27 | பார்வைகள் : 17617


உலகின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது கடும் வெப்பம் நிலவி வருகிறது. பல நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெப்பத்தால் நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன.  பிரிட்டனில் கடும் வெப்பத்தினால், அங்குள்ள ஒரு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்த பிறகு, 17 ஆம் நூற்றாண்டின் பழமையான கிராமத்தின் இடிபாடுகள் இப்போது தென்படுகின்றன. 'வெஸ்ட் எண்ட்' என்பது ஒரு சிறிய கிராமமாகும்,  சுமார் 400 அண்டுகள் பழமையான இந்த கிராமம் 1966 ஆம் ஆண்டில்  நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.  
 
வெப்பநிலை அதிகரித்துள்ளதன் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து, நீர்ல் மூழ்கிய பழமையான கிராமத்தின் இடிபாடுகள் இப்போது தென்படுகின்றன.  நீரில் மூழ்கிய சாலைகள் மற்றும் பாலங்கள், மில்கள் தற்போது வெளியே தெரிகின்றன. சிறிய கிராமத்தில் ஆலைகளையும்  காண முடிந்தது. ஆளி விதைகளுக்கு பிரபலமாக இருந்த இந்த கிராமத்தில் மில்கள் அதிகம் இருந்தன. தொழிலில் சிறந்து விளங்கிய அந்த நகரம் சிறிது சிறிது வெள்ளத்தில் மூழ்கி வந்ததில் தொழிலும் படிப்படியாக அழிந்தது. இதனால் மக்கள் அங்கு வாழ முடியாமல் இந்த பகுதியை விட்டு வெளியேறினர். அந்த இடம் மிக பெரிய நீர் தேக்கமாக மாறியது. 
 
பல ஆண்டுகள் முந்தைய ஆலைகளில் இடிபாடுகள் நீரின் கரையில் காணப்பட்டன. கடுமையான வெப்ப நிலை காரணமாக, பிரிட்டன் முழுவதிலும் உள்ள நீர் நிறுவனங்களுக்கு  நீர் தேவை அதிகரித்து வருவதால், இந்த ஆண்டின் சராசரியை விட நீர்த்தேக்கங்களின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது. அடுத்த வார தொடக்கத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், நீர்மட்டம்  தொடர்ந்து குறைந்து வருவது கவலை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.
 
லண்டன் மற்றும் மத்திய இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடுமையான வெப்பம் மான்செஸ்டர் மற்றும் யார்க் பகுதிகளை பாதிக்கலாம் என வானிலை அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் வெப்பநிலை 35 செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் எனவும் வானிலை எச்சரிக்கை கூறுகிறது. தண்ணீரை சேமிக்க வேண்டும்' என, குடிநீர் வழங்கும் நிறுவனங்கள் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. வெப்பம் காரணமாக, ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளும் மூடப்படலாம் எனவும் தகவல்கள் தெரிகின்றன.
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்