1,900 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆமை - வெளியான தகவல்
25 ஆனி 2022 சனி 08:38 | பார்வைகள் : 15506
1,900 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆமையும் அதன் முட்டையும் இத்தாலியின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரான பொம்பேயில் (Pompeii) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொம்பே கி.பி. 79ஆம் ஆண்டில் வெடித்த Vesuvius எரிமலையின் சாம்பலுக்குள் மூழ்கிப் புதையுண்ட நகரம்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆமை, ஒரு கிடங்கின் தரைக்கு அடியில் கிடந்தது. அது எரிமலை வெடிப்பதற்கு முன்பு மடிந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கூறினர்.
ஆமை, முட்டை இடுவதற்கு ஒரு சின்ன குழியைத் தோண்ட முயற்சி செய்த வேளையில் இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
ஆமை கண்டுபிடிக்கப்பட்ட இடம் முதன்முதலில் ஒரு வசதியான வீடாக இருந்தது. கி.பி. 62ஆம் ஆண்டில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, சுற்று வட்டாரமே சேதத்திற்கு உள்ளானது. வீடு, பின்னர் பொதுக் குளியல் வசதியாக மாற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.