Paristamil Navigation Paristamil advert login

பிறந்த சில நாட்களிலேயே கண் பார்வை பறிபோகும் மர்ம கிராமம்!

பிறந்த சில நாட்களிலேயே கண் பார்வை பறிபோகும் மர்ம கிராமம்!

11 ஆனி 2022 சனி 16:58 | பார்வைகள் : 14350


உலகில் சில இடங்களில் நடக்கும் விசித்திரமான  நிகழ்வுகளும் மர்மங்களும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றன. சில சமயங்களில் அவை விஞ்ஞானிகளுக்கு கூட தீர்க்க முடியாத புரியாத புதிராக உள்ளது. அவ்வகையான மர்மம் நிறைந்த ஒரு இடம் தான் மெக்ஸிகோவில் உள்ள ஒரு கிராமம். இந்த கிராமத்தில் பிறந்து சில நாட்களிலேயே கண்பார்வை இழக்கும் சம்பவங்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 

 
இந்தக் கிராமத்தில் குழந்தைகள் பிறக்கும் போது நல்ல ஆரோக்கியமான உடல் நிலையில் தான் பிறக்கின்றன. ஆனால், பிறந்து சில நாட்களிலேயே அவர்களால் எதையும் பார்க்க முடியாமல் போவதாகம் கூறப்படுகிறது. இது கேட்பதற்கு சற்று வினோதமாகத் தோன்றலாம். ஆனால் இது முற்றிலும் உண்மை.
 
ஜாபோடெக் பழங்குடியினர் மெக்சிகோவில் உள்ள மர்மமான டில்டெபாக் கிராமத்தில் (Tiltepec Village) வாழ்கின்றனர். இங்கு மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கு இதே தான் இது நடக்கிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அதாவது மனிதர்கள் முதல் விலங்குகள் வரை அங்குள்ள அனைவரும் பார்வையற்றவர்கள். 
 
இதனால்தான் மெக்ஸிகோவில் அமைந்துள்ள டில்டெபெக் கிராமம் பார்வையற்றோரின் கிராமம் (Village Of Blind People) என்று அழைக்கப்படுகிறது.  இது உலகின் மிக மர்மமான கிராமங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விநோதமான காரணத்தினால் இந்த கிராமம் உலகம் முழுவதும் பிரபலமானது.
 
மெக்சிகோ கிராமத்து மக்கள் அங்கு இருக்கும் ஒரு மரம் தான் தங்கள் குருட்டுத்தன்மைக்கு காரணம் என்று கருதுகின்றனர். தங்கள் கிராமத்தில் சபிக்கப்பட்ட மரம் இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். இந்த மரத்தைப் பார்த்தவுடனே அவர்கள் குருடர்களாகி விடுகிறார்கள் எனக் கூறுகின்றனர். இங்கு பல ஆண்டுகளாக இந்த மரம் இருப்பதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். இருப்பினும், சிலர் இவற்றை மூடநம்பிக்கை எனவும் கருதுகின்றனர்.
 
அதே சமயம் இந்த கிராமத்தில் விஷ ஈக்கள் அதிக அளவில் காணப்படுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த ஈக்கள் கடிப்பதால்தான் மக்கள் குருடாகிறார்கள் என அவர்கள் கூறுகின்றனர். மெக்சிகோ அரசும் இங்கு வசிக்கும் மக்களுக்கு உதவ கடுமையாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது. இங்கு வாழும் மக்களின் உடல் அமைப்பு, வேறு விதமான தட்பவெப்பநிலையில் அவர்கள் வாழ முடியாது என்ற நிலையில் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேற மறுக்கின்றனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்