வேற்றுகிரக வாசிகளை 259 முறை பார்த்ததாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!
16 வைகாசி 2022 திங்கள் 20:22 | பார்வைகள் : 13368
பூமியை தவிர்த்து மற்ற கிரகங்களில் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. இது குறித்து பல்வேறு ஆராச்சியாளர்கள் பல வருடங்களாக ஆராச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வேற்றுகிரக வாசிகள் உண்மையில் இருக்கிறார்களா, இருந்தால் அவர்கள் எப்படி காட்சி அளிப்பார்கள் என்ற எண்ண ஓட்டம் அனைவர் மனதிலும் ஓடுவதை தவிர்க்க முடியாது.
இந்நிலையில், வேற்று கிரக வாசிகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் பிரிட்டிஷ் யுஎஃப்ஒ ஆராய்ச்சி அமைப்பு அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் பிரிட்டனில் 250 க்கும் மேற்பட்ட முறை வேற்றுகிரகவாசிகள் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் வேற்றுகிரகவாசிகள் கண்ணில் தென்படுவது மிகவும் குறைவாகவே இருந்தது எனவும் தெரிவித்தனர்.
பிரிட்டனில் அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட ஏலியன்கள்: உலகில் பலர் வேற்றுகிரகவாசிகளைப் பார்த்ததாகக் கூறுவதை நாம் பல முறை கேள்விப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் UFO அல்லது ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரக வாசிகள் அடிக்கடி கண்ணில் தென்படுவதாக ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி கூறியுள்ளார். பிரிட்டனில் கடந்த ஆண்டு 250 தடவைகளுக்கு மேல் வேற்றுகிரகவாசிகள் காணப்பட்டதாக அவர் கூறுகிறார்.
பிரிட்டனில், வேற்றுகிரகவாசிகளை அருகில் இருந்து பார்த்த மக்கள் அதிர்ச்சியில் இருந்து விடுபட மன நல ஆலோசனை வழங்கப்பட்டதாக 'தி சன்' நாளிதழில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது . சிறிய பச்சை மனிதனையும் விண்கலத்தையும் பார்த்ததாக பலர் கூறினார். பிரிட்டிஷ் UFO ஆராய்ச்சி சங்கம், 2021ம் ஆண்டில் 259 வேற்றுகிரகவாசிகள் காணப்பட்டதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது
2019 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் வேற்று கிரக வாசிகள் கண்ணில் பட்டதற்கு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களின் ஏவுதலே ஒரு முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் கூறினர். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களைப் பற்றி பொதுமக்கள் அறிந்ததால், 2020 ஆம் ஆண்டில், ஏலியன்களை பார்த்ததாக பதிவு செய்யப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாகவும், 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது.
ஏலியன் ரசிகர் கிறிஸ் போன்ஹாம் என்ற 56 வயது நபர் வேற்றுகிரகவாசியை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக கூறினார். மற்ற கிரகங்களில் உயிர்கள் வாழ்கின்றன என்பதில் தனக்கு எப்போதும் நம்பிக்கை இருப்பதாகவும், வேற்றுகிரகவாசியை சந்திப்பது தனது கனவாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.