ஐரோப்பாவில் நாய்களின் தற்கொலை எல்லை - நீடிக்கும் மர்மம்
19 தை 2022 புதன் 12:08 | பார்வைகள் : 10461
மனிதர்களில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பதை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பொதுவாக, மன அழுத்தம், காதல் தோல்வி அல்லது நிதி பிரச்சனை இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. ஆனால் விலங்குகள், குறிப்பாக செல்லப்பிராணிகள் தற்கொலை செய்து கொள்வது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா...
ஏனெனில் விலங்குகள் விஷயத்தில், தற்கொலை செய்து கொள்வது என்பது அனைவருக்கும் நம்ப முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் என்பது தான் உண்மை நிலை. ஆனால் விலங்குகள் கூட தற்கொலை செய்து கொள்ளும் என்பதை பாலத்தில் இருந்து குதித்து தனதி உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு பாலத்தில், நாய்கள் தற்கொலை செய்து கொள்கின்றன. பாலத்திற்கு வரும் நாய்கள், இங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கின்றன என்று கூறப்படுகிறது. ஸ்காட்லாந்தில் ஒரு பாலம் உள்ளது, அதில் இருந்து பல நாய்கள் குதித்து தற்கொலை செய்து கொள்கின்றன. இந்த பாலத்தின் உயரம் சுமார் 50 அடி என்று கூறப்படுகிறது. இந்த பாலத்தில் இருந்து இதுவரை நூற்றுக்கணக்கான நாய்கள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளன; அதில் 50 நாய்கள் உயிரிழந்துள்ளன.
இந்த இடத்திற்கு வந்த பிறகு நாய்கள் தாங்களாகவே குதிப்பதற்கான காரணம் என்ன என்பது இதுவரை புரியாத புதிராகவே நீடிக்கிறது என நியூயார்க் டைம்ஸ் செய்து வெளியிட்டுள்ளது. இந்த பாலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்க துவங்கியதும், பாலத்தில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
அதே சமயம் இந்த சம்பவங்கள் அனைத்திற்கும் பின்னால் ஏதோ பேய் இருப்பதாக சிலர் நம்புகிறார்கள். இன்றும் இந்த பாலத்தில் 'White Lady' என்ற பெண்ணின் பேய் உலவுவதாக நம்பப்படுகிறது. பேராசிரியர் பால் ஓவன்ஸ், இது குறித்து ஆராய்ந்த பிறகு, தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார். ஒருமுறை பாலத்தின் மீது நின்று கீழே பார்த்தபோது, யாரோ பின்னாலிருந்து தொட்டதை உணர்ந்ததாக சொன்னார்.