Paristamil Navigation Paristamil advert login

130 ஆண்டுகள் பழமையான சிலைக்கு அடியில் இருந்து கால இயந்திரம் கண்டுபிடிப்பு!

130 ஆண்டுகள் பழமையான சிலைக்கு அடியில் இருந்து கால இயந்திரம் கண்டுபிடிப்பு!

2 தை 2022 ஞாயிறு 07:55 | பார்வைகள் : 10017


 130 ஆண்டுகள் பழமையான சிலைக்கு அடியில் இருந்த தொன்மையான பொருட்கள் (Time capsule) வெர்ஜீனியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. ரிச்மண்டில் உள்ள ராபர்ட் ஈ. லீ (Robert E. Lee Monument) என்ற ஜெனரலின் 130 ஆண்டுகள் பழமையான சிலைக்கு அடியில் இருந்த டைம் கேப்சூல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 
அதன் கண்டுபிடிப்புக்குப் பிறகு, வர்ஜீனியா கவர்னர் ரால்ப் நார்தம் இது குறித்து ட்வீட் செய்தார். "இதுதான் அனைவரும் தேடும் கால இயந்திரமாக இருக்கலாம்," என்று கூறினார்.
 
1887 ஆம் ஆண்டு செய்தித்தாளில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின்படி, பல கலைப்பொருட்கள், நினைவுச் சின்னங்கள் (monuments and artefacts) மற்றும் ஆபிரகாம் லிங்கனின் அரிய புகைப்படம் மற்றும் நீண்ட காலமாக தேடப்பட்டு வரும் சில பொக்கிஷங்கள் இந்த சிலைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்தது. 
 
தற்போது கிடைத்துள்ள பெட்டி, எக்ஸ்ரே மூலம் ஸ்கேன் செய்யப்படுகிறது. அதே சிலையின் அடிப்பகுதியில் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட முந்தைய டைம் கேப்ஸ்யூலில் (Time Capsule) மூன்று புத்தகங்கள், ஒரு துணி தண்ணீரில் நனைந்து இருந்து. அதோடு, உறையில் ஒரு புகைப்படம் மற்றும் ஒரு நாணயமும் இருந்தது.
 
நினைவுச்சின்னத்தின் கட்டுமானத்தை மேற்பார்வையிட்டவர்கள், தகரப் பெட்டி ஒன்றை விட்டு விட்டுச் சென்றுவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. உள்நாட்டுப் போரின் போது வடக்கு வர்ஜீனியாவின் ராணுவத்திற்கு, கட்டளைத் தலைவராக இருந்தார் ராபர்ட் ஈ. லீ. ரிச்மண்டில் உள்ள ராபர்ட் ஈ சிலை 1890 இல் நிறுவப்பட்டது.
 
இந்த சிலையை அகற்றுவதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் மாதத்தில்தான், வர்ஜீனியாவின் உச்ச நீதிமன்றம், சிலையை அகற்றுவது தொடர்பான தீர்ப்பையும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கியது.  
 
கடந்த ஆண்டு மினசோட்டாவில் வெள்ளையின போலீஸ் அதிகாரியால் கொலை செய்யப்பட்ட கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிலாய்ட் (George Floyd) இறந்ததைத் தொடர்ந்து இந்த சிலை இன நீதிக்கான போராட்டங்களின் மையமாக மாறியது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்