எரிமலைகள் வெடித்து, பூமியின் 90 சதவீத உயிரினங்கள் அழிந்தன - ஆய்வில் வெளியான தகவல்
18 மார்கழி 2021 சனி 07:05 | பார்வைகள் : 10459
பூமியின் 90 சதவீத உயிரினங்கள் அழிந்து போனதற்கான காரணத்தை தேடும் முயற்சியில் உலகில் பல்வேறு ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. அதில், சீன அறிவியல் கழகம் செய்த ஆராய்ச்சியில் வெளியான முடிவுகள் எரிமலை வெடிப்பே வெகுஜன அழிவுக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதற்காக, தெற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள தாமிரப் படிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
250 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்த 90 சதவீத உயிரினங்கள் அழிந்துவிட்டன. இந்த நிகழ்வு கிரேட் டையிங் (The Great Dying) என்று அழைக்கப்படுகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட பயங்கரமான தட்பவெட்ப மாறுதலால் உலகில் உயிரினங்கள் அழிந்துப் போயின.
சீன அறிவியல் கழகம் செய்துள்ள இந்த ஆராய்ச்சியில், எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட தட்பவெட்ப மாறுதல்களால், குளிர் பூமியில் அளவுக்கு மீறி அதிகரித்ததால், பேரழிவு ஏற்பட்டது என்று தெரியவந்துள்ளது. இதற்காக, தாமிரத்தின் வளமான படிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அங்கிருக்கும் பாறைகளை ஆய்வு செய்தபோது, (Research studies) அவை எரிமலை சாம்பல் அடுக்குகளால் மூடப்பட்டிருப்பது தெரியவந்தது.
தெற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பாறைகளில் படிந்திருக்கும் சாம்பல், கந்தகம் கொண்ட எரிமலைகளின் உமிழ்வுகளால் உருவாகியிருப்பதும், அல்லது அந்த பாறைகளில் எரிமலை உமிழ்வின் தாக்கம் இருப்பதும் தெரியவந்துள்ளது.
வளிமண்டலத்தில் கந்தகம் சென்று கலக்கும்போது, சல்பர் ஏரோசோல்கள் விண்வெளியில் உள்வரும் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் வகையில் செயல்படுகின்றன மற்றும் மேகங்களை மாற்றியமைக்கின்றன, இதன் விளைவாக வளிமண்டலத்தில் ஏற்படும் துரித மாற்றங்களால், கடும் குளிர் ஏற்படுகிறது. எரிமலை வெடிப்பினால், சராசரி உலக வெப்பநிலை தற்காலிகமாக 4 °C (7.2 °F) குறைந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
புதிய ஆராய்ச்சியின் முடிவு
முதல் 'கிரேட் டையிங்' பொதுவாக சைபீரியாவில் ஏற்பட்ட பிரம்மாண்டமான எரிமலை வெடிப்புடன் தொடர்புடையது. CO₂ வெளியேற்றத்தால் பேரழிவு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் சீன அறிவியல் அகாடமி தலைமையிலான ஆராய்ச்சி இந்த நிகழ்வு குளிர்விக்கும் விளைவால் ஏற்பட்டது என்று கூறுகிறது.