வியக்கவைக்கும் உயரமான மலைகள் கண்டுபிடிப்பு
13 ஆனி 2023 செவ்வாய் 11:04 | பார்வைகள் : 7691
எவரெஸ்ட் சிகரத்தை விட 3 முதல் 4 மடங்கு உயரமான மலைகள் பூமியின் உள்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அண்டார்டிகாவில் உள்ள நில அதிர்வு மையங்களை அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் ஆய்வு செய்தார்கள்.
பூமியின் உள் பகுதியில் 2900 கி.மீ ஆழத்தில் ஒரு வியக்கத்தக்க பெரிய மலைகளை கண்டுபிடித்தனர்.
இந்த மலைக்கு அதி மற்றும் குறைந்த வேக மண்டலங்கள் என்று பெயர் வைத்துள்ளனர்.
இது குறித்து விஞ்ஞானி சமந்தா ஹேன்சன் கூறுகையில், இந்த வியக்கத்தக்க மலைத்தொடர் பூகம்பங்கள் மற்றும் அணு வெடிப்புகள் நில அதிர்வு தரவுகளை உருவாக்கும்.
ஆனால், இந்த நில அதிர்வுகளின் தரவுகளை உருவாக்காததால் நம் கண் பார்வையிலிருந்து இந்த மலை தப்பியுள்ளது.
மேலும், இந்த மலை 24 மைல்கள் உயரத்தில் இருப்பதாகவும், எவரெஸ்ட் சிகரம் மேற்பரப்பிலிருந்து 5.5 மைல் (8.8 கிலோமீட்டர்) தொலைவில் இருக்கிறது என்றார்.