அமெரிக்காவில் விலங்கியல் பூங்காவில் முதன்முதலில் பிறந்த கொரில்லா குட்டி!
21 ஐப்பசி 2020 புதன் 13:27 | பார்வைகள் : 9648
அமெரிக்காவில் விலங்கியல் பூங்கா ஒன்றில் முதன்முறையாக கொரில்லா ஒன்று குட்டி ஈன்றுள்ளது.
போஸ்டனில் உள்ள ஃபிராங்ளின் உயிரியல் பூங்காவில் 39 வயதான கிகி என்ற பெண் கொரில்லா வளர்க்கப்பட்டு வந்தது. இந்தக் கொரில்லா கடந்த வாரம் ஆண் குட்டியை ஈன்றது.
தற்போது அந்தக் குட்டியை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தாயும் சேயும் நலமாக இருப்பதாக விலங்கியல் பூங்கா மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்