15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர்! ஏலத்திற்கு வரும் புதைமடிமம்
11 ஐப்பசி 2020 ஞாயிறு 09:28 | பார்வைகள் : 9359
15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அலோசோரஸ் என்ற டைனோசர் வகை உயிரினத்தின் புதைபடிமம் ஏலத்திற்கு விடப்பட உள்ளது.
12 அடி உயரம் கொண்ட அந்த உயிரினம் புதைபடிமம் அமெரிக்காவின் வயொமிங் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது பாரிசில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அது, ஒன்று முதல் ஒன்றரை மில்லியன் யூரோ வரை விலைபோகும் என எதிர்பார்ப்பதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
அலோசரஸ் உயிரினம் ஜூராசிக் காலத்தில் மிகப் பெரிய வேட்டையாடும் உயிரினமாக இருந்ததால் அதன் முழுமையான எலும்புக்கூடு வைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம் என்று குறிப்பிட்டுள்ள அந்த நிறுவனம் நாளை மறுநாள் இதற்கான ஏலம் நடக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.