Paristamil Navigation Paristamil advert login

ஆஸ்திரேலிய கடற்கரையில் 400க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய மர்மம்! அதிர்ச்சியில் ஆர்வலர்கள்

 ஆஸ்திரேலிய கடற்கரையில் 400க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய மர்மம்! அதிர்ச்சியில் ஆர்வலர்கள்

24 புரட்டாசி 2020 வியாழன் 14:09 | பார்வைகள் : 12871


ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கரை ஒதுங்கிய 400க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் உயிரிழந்ததால் சூழியல் ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
டாஸ்மேனியா தீவுப் பகுதியில் கடந்த திங்கள் கிழமை ஏராளமான பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் ஒரே நேரத்தில் கரையில் சிக்கித் தவித்ததால் அதனை மீட்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
 
ஆனாலும் 50 திமிங்கலங்களை மட்டுமே மீட்க முடிந்ததாக டாஸ்மேனிய அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் மணற்பரப்பில் சிக்கி 400 பைலட் திமிங்கலங்கள் உயிரிழந்ததாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
 
இதுபோன்று மொத்தமாக திமிங்கலங்கள் ஒன்று கூடி உயிரிழப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்