38 செ.மீ. அளவுக்கு கடல் மட்டம் உயரும் - நாசா ஆய்வில் வெளியாகிய தகவல்

23 புரட்டாசி 2020 புதன் 06:44 | பார்வைகள் : 12954
2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு உயரும் என்று நாசா ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள செய்திகுறிப்பில், பசுமை இல்லா வாயுகள் வெளியேற்றம் தொடர்ந்தால் கிரின்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகுவது அதிகரிக்கும் என்றும், இதனால் 2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கிரீன்லாந்தில் 2100-ம் ஆண்டுக்குள் கடல் மட்ட உயர்வு 8 முதல் 27 சென்டிமீட்டர் அளவு இருக்கும் என்றும் அண்டார்டிகாவில் 3 முதல் 28 சென்டி மீட்டர் வரை கடல் மட்டம் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1