8 ஆண்டுகளுக்கு பிறகு ஃபிளமிங்கோக்களால் மீண்டும் பொழிவு பெறும் நகுரு ஏரி!
6 புரட்டாசி 2020 ஞாயிறு 17:37 | பார்வைகள் : 9644
கென்யாவில் நீர்மட்டம் உயர்வால் 8 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறிய கண்கவர் ஃபிளமிங்கோக்கள் மீண்டும், படையெடுக்க தொடங்கி உள்ளதால் நகுரு ஏரி புது பொழிவு பெற்று வருகிறது.
ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததால் அருகிலுள்ள பொகோரியா, பாரிங்கோ உள்ளிட்ட ஆழமற்ற ஏரிகளுக்கு ஃபிளமிங்கோக்கள் சென்றன. இதனால் அதையொட்டிய தேசிய பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவாய் வீழ்ச்சி ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் தற்போது உள்ள ஏரிகளும் வெள்ளத்தில் மூழ்கியதால், உணவு தேடி ஃபிளமிங்கோக்கள் மீண்டும் நகுரு ஏரிக்கு திரும்பி உள்ளன.