Paristamil Navigation Paristamil advert login

1,300 ஆண்டுகால பழைமை வாய்ந்த புத்தர் சிலை நேர்ந்த பரிதாபம்!

1,300 ஆண்டுகால பழைமை வாய்ந்த புத்தர் சிலை நேர்ந்த பரிதாபம்!

20 ஆவணி 2020 வியாழன் 07:22 | பார்வைகள் : 9606


சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் 1,300 ஆண்டுகால பழைமை வாய்ந்த புத்தர் சிலைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

 
லேசான் (LESHAN) எனுமிடத்தில் மலைக்கு நடுவே 71 மீட்டர் உயர புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மிகப்பழைமையான அந்த சிலை இருக்கும் மலையை சுற்றிலும் ஓடும் நதிகளில், கனமழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
 
குறிப்பாக சிலையின் முன்பகுதியில் ஓடும் நதி வெள்ளம், 70 ஆண்டுகளில் முதல்முறையாக சிலையின் கால்விரல்களை தொட்டு செல்கிறது. வெள்ளத்தில் பலபகுதிகள் மூழ்கியுள்ளன. அங்கு வசித்த 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்