பூமிக்கு திரும்பிய நாசா விஞ்ஞானிகள் வெளியிட்ட அபூர்வ தகவல்கள்!
7 ஆவணி 2020 வெள்ளி 14:41 | பார்வைகள் : 9369
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய போது, மிருகத்தின் வயிற்றுக்குள் மாட்டிக்கொண்டதை போல் உணர்ந்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் முறையாக தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த விண்கலம் மூலம், சர்வதேச விண்வெளி மையம் சென்ற பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி , 2 மாத கால ஆய்வுகளை நிறைவு செய்த பின், பூமிக்கு திரும்பினர்.
19 மணி நேரம் நீடித்த இந்தப் பயணத்தின் முடிவில், மெக்சிகோ வளைகுடாவில் உள்ள பென்சாகொலா கடலில், மணிக்கு 15 மைல் வேகத்தில், பாராசூட் மூலம் கடலில் இறங்கினர். தங்கள் விண்வெளி பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போது, மணிக்கு 17,500 மைல் வேகத்தில் பூமிக்கு திரும்பிய போது வளிமண்டலத்தில் ஏற்பட்ட இரைச்சலால் காதுகள் செவிடாவது போல் உணர்ந்ததாக Bob Behnkhen தெரிவித்தார்.
மேலும், பூமியை நெருங்கும் வேளையில், விண்கலத்தில் ஏற்பட்ட அதிர்வுகளால், மிருகத்தின் வயிற்றுக்குள் மாட்டிக்கொண்டதை போலும், இதனால் தங்கள் எழும்புகள் குழுக்கி எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.