மாஸ்கோ உயிரியல் பூங்காவில் பிறந்துள்ள எகிப்து இன வெளவால்!
1 ஆவணி 2020 சனி 15:27 | பார்வைகள் : 9558
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள உயிரியல் பூங்காவில், புதிதாக பிறந்துள்ள எகிப்து இன பழந்திண்ணி வெளவால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
23 கிராம் எடையில், உள்ளங்கை அளவில், பிறந்துள்ள வெளவாலின் காணொலியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பூங்கா நிர்வாகம், இந்தப் பெண் வெளவாலுக்கு Tango என பெயரிட்டுள்ளது.
கடந்த 1996 ஆம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட எகிப்து இன வெளவால்கள், ரஷ்யாவில் இதுவரை 320 குட்டிகளை ஈன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.