Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் 1700 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலை கண்டுபிடிப்பு!

பாகிஸ்தானில் 1700 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலை கண்டுபிடிப்பு!

20 ஆடி 2020 திங்கள் 13:13 | பார்வைகள் : 9012


பாகிஸ்தானில் 1700 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலை அடித்து உடைக்கப்பட்டது தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
கைபர்-பக்துன்க்வா மாகாணத்தின் மர்தான் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயப் பண்ணையில், அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது காந்தார நாகரிகத்தில் உருவாக்கப்பட்ட புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
 
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த உள்ளூர் மதத் தலைவரின் வலியுறுத்தலின் பேரில், இஸ்லாமிய மதத்திற்கு எதிராக இருப்பதாக கூறி புத்தர் சிலையை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது.
 
ஆராய்ச்சியாளர்கள் சிலையை முழுவதுமாக வெளியே எடுக்காத நிலையில், சம்மட்டியை கொண்டு சிலையை சேதப்படுத்திய செயலுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்