எகிப்து பிரமிட் மர்மங்கள்!
7 ஆடி 2020 செவ்வாய் 14:03 | பார்வைகள் : 10364
உலகின் தொன்மையான ஏழு அதிசயங்களில் ஒன்று பிரமிடு. சீனப் பெருஞ்சுவரைப் போலவே நிலவிலிருந்து பார்த்தால் தெரியக் கூடியது. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டும், அதனால் எந்தவித பாதிப்புகளும் அடையாமல், தொன்மை உலகின் மர்மமான ஒரு சரித்திரத்தின் அடையாளமாக இன்றளவும் நிமிர்ந்து நிற்கிறது பிரமிடு. இந்தப் பிரமிடுகளை உருவாக்கியது யார், என்ன காரணத்திற்காக இவற்றை உருவாக்கினார்கள், இந்தப் புதிரான கட்டிட அமைப்பில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன என்பது பற்றி விஞ்ஞானிகளிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் ஒன்றைக் கூற, விஞ்ஞானிகள் அதற்கு எதிராக ஒன்றைக் கூற என்று காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
'பிரமிடு' (Pyramid) என்றால் பலரும் சொல்வது, "அது எகிப்தில் இருக்கும் ஒரு கட்டிடம். அதில் அக்காலத்தில் இறந்த மன்னர் போன்றவவர்களின் சடலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். 'மம்மி' என்றழைக்கப்படும் அவற்றின் உடல்கள் இன்னமும் கெடாமல் இருக்கின்றன. அது தவிர பல்வேறு புதையல்களும் அங்கே இருக்கக்கூடும்" என்பதுதான்.
ஆனால் இவை மட்டும் தான் பிரமிடா? வெறும் உடலைப் பாதுகாக்கும் சமாதியாகத் தானா அவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டியிருப்பார்கள்? – என்ற கேள்விகள் சிந்தனைக்குரியன.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தப் பிரமிடுகளைச் சுற்றி எந்தவிதமான மலைகளோ, பாறைகளோ, கற்குன்றுகளோ கிடையாது. நகரத்தின் அருகில் மட்டுமல்ல, தொலைவிலும் கூட இல்லை. ஒரு புறம் பாலைவனமும், மறுபுறம் கடலும் தான் இந்நகரைச் சுற்றி உள்ளது. அப்படியானால் இந்தப் பிரமிடை எப்படி உருவாக்கியிருப்பார்கள், இத்தனை லட்சம் கற்களை எங்கிருந்து கொண்டு வந்திருப்பார்கள், இவ்வளவு பெரிய உயரத்திற்கு அவற்றை எப்படி எழுப்பியிருப்பார்கள் என்றுதான் வரலாற்றாய்வாளர்களும், விஞ்ஞானிகளும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த அளவுக்கு அருகில் பூமியில் எங்காவது கற்களைத் தோண்டி எடுத்து இவற்றைக் கட்டியிருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, அவ்வாறு தோண்டி எடுத்த இடங்களில் மிகப் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் பலமைல் சுற்றளவிற்கு அப்படி எந்த ஒரு பெரிய பள்ளமும் இல்லை. ஆகவே எப்படி இவற்றை உருவாக்கியிருப்பார்கள் என்று இன்னமும் விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டுதான் உள்ளனர்.
ஒரு சிலர் இந்தவகைப் பிரமிடுகள் மனிதர்களால் கட்டப்படவில்லை; மனிதர்களை விடப் பல்வேறு அதிசய ஆற்றல்கள் கைவரப் பெற்ற வேற்றுக் கிரக மனிதர்களால் கட்டப்பட்டவை என்றும் கூறுகின்றனர். இந்தக் கூற்றில் உண்மை இருக்கலாம் என்று கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள், ஸ்பிங்க்ஸ் பிரமிடைப் போன்ற ஓர் பிரமிடு உருவச்சிலை செவ்வாய்க் கிரக பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாகக் கூறியிருக்கின்றனர். அவர்கள், செவ்வாய்க் கிரகத்தில் சைடோனிக் எனக் குறிக்கப்படும் ஒரு பகுதியில் காணப்படும் பிரமிடு போன்ற அமைப்புகளுக்கும், எகிப்தின் பிரமிடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கக் கூடும் என்றும் கருதுகின்றனர்.
எகிப்து பிரமிட் கட்டுமான ரகசியம்:-
எகிப்திய பிரமிடுகளே மிகவும் புகழ்பெற்றவையும் அறியப்பட்டவையும் ஆகும். பாறைகளால் கட்டப்பட்ட இவற்றில் சில உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாக அமைந்தன. பெரும்பாலான பிரமிடுகளின் மேற்பரப்புகள் வெள்ளைநிற சுண்ணக்கற்களால் மிகவும் எதிரொளிக்குமாறு தீட்டப்பட்டிருந்தன. இதனால் தொலைவிலிருந்து பளபளப்புடன் காணப்பட்டன. முகட்டுக்கல் அல்லது சிகரம் மட்டும் கருங்கல் அல்லது எரிமலைப்பாறையால் ஆனதாகவும் தங்கம், வெள்ளி அல்லது தங்கம்,வெள்ளியின் கலப்பு உலோகத்தினால் பூசப்பட்டும் இருந்தது.
கி.மு 2700க்குப் பிறகு கட்டத் துவங்கிய எகிப்தியர்கள் கி.மு 1700 வரை பிரமிடுகளைக் கட்டினர். மூன்றாம் வம்ச காலத்தில் யோசர் மன்னர் காலத்தில் ஆறு மஸ்தபாக்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி முதல் பிரமிடு ஒன்றை கட்டினர். எகிப்தின் பெரிய பிரமிடுகள் கிசா என்றவிடத்தில் உள்ளன. பெரும்பாலான பிரமிடுகள் நைல் ஆற்றின் மேற்குப் புறத்திலேயே கட்டப்பட்டன.
2008ஆம் ஆண்டுப்படி, இதுவரை 135 பிரமிடுகள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன. எகிப்தின் மிகப்பெரிய பிரமிடாகிய கிசாவின் பெரிய பிரமிட்டின் அடித்தளம் 52,600 சதுர மீற்றர்கள் (566,000 sq ft) பரப்பளவில் அமைந்துள்ளது. இது பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. முகட்டில் பதித்திருந்த சுண்ணக்கற்களும் கடற்சங்குகளும் காலப்போக்கில் விழுந்துவிட்டன அல்லது திருடப்பட்டு கெய்ரோவில் கட்டிடங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. பெரும்பாலான பிரமிடுகள் கெய்ரோவிற்கு அண்மையிலேயே உள்ளன.
பிரமிடுகளில் மிகப் பெரிய பிரமிடான கிசா பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் 9 டன் வரை எடை கொண்டது. இந்தக் கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.
தற்கால எகிப்துத் தலைநகர் கெய்ரோவின் புறப் பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலகப் புகழ் பெற்றவை. உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகப் போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான, இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத செய்திகளை உள்ளடக்கியது. அய்நூறு அடி உயரம் கொண்ட இந்தப் பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்புப் பாறைக் கற்களால் எழுப்பப்பட்டது.
இவ்வளவு எடை கொண்ட கற்களை அய்நூறு அடி உயரத்திற்குக் கொண்டு சென்ற விந்தையை வரலாற்று நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டுள்ளனர். சுண்ணாம்புக் கற்களின் மேலடுக்குகள் நன்றாக பாலிஷ் செய்யப்பட்ட பளிங்கு சுண்ணாம்புக் கற்களால் வெளிப்புறம் பதிக்கப்பட்டுள்ளன.
இருபத்தி மூன்று லட்சம் சுண்ணாம்புக் கற்கள் எவ்வாறு அவ்வளவு உயரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன என்பதும், அத்தகைய பாலைவனப் பரப்பில் எவ்வாறு சாத்தியம் என்பதும் ஆய்வில் உள்ள ஒன்று. புற கற்களில் வித்தியாசமான எழுத்துகள் பதிக்கப்பட்டுள்ளன.
இவற்றை மட்டும் பதித்தால் பத்தாயிரம் பக்கங்கள் வரும் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து. கிசாவில் உள்ள மூன்று பிரமிடுகளும் பிதாகரஸ் என்கிற கணித விதிகளின்படியும், பிரபஞ்சத்தில் உள்ள மூன்று ஓரின நட்சத்திரங்களைக் குறிக்கின்ற துல்லியக் கோட்பாட்டின்படியும் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிரமிடின் உடல்கள் கெடாமல், மாறாக முற்றிலும் உலர்ந்த நிலையில் உள்ளன. இது ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்குப் பெருந்தீனியாக உள்ளது! இன்னும் முற்றிலுமாக கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள், குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்ற சதுரத் துளைகளின் பயன்பாடுகள் திருட வருபவர்களைக் குழப்புவதற்காக அமைக்கப்பட்ட தந்திரப் பாதைகள்.
இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு இத்தகைய சதுரத் துளைகளின் ரகசியங்களை அறிந்து கொள்ள எந்திர மனிதனை (ரோபோட்) உள்ளே செலுத்தி உலகம் முழுதும் பல்லாயிரம் மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாகக் கண்டபோது. உட்புறம் மேலும் சில வாயில்கள் அடைக்கப்பட்டிருந்ததை உலகம் கண்டு வியந்தது. இவற்றைத் திறக்கவும் அதற்குப் பின்புறம் உள்ள மர்மங்களை அறிந்து கொள்ளவும் தற்பொழுதும் ஆய்வுக் குழுக்கள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.
வியக்கத்தக்க முறையில் கட்டப்பட்டுள்ள பிரமிடின் கூம்பகங்களை பண்டைக் கால ஃபாரோ மன்னர்களின் வெறும் புதைப்புப் பீடமாக மட்டும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது! பிரமிடுகள் பூர்வீக எகிப்தியரின் வரலாற்றுக் களஞ்சியத்தின் சுரங்கமாக வடிக்கப்பட்டதுடன், அக்காலத்திய கணித, விஞ்ஞான, வானியல், மருத்துவ அறிவுத் திறமைகளையும், முறைகளையும் பறைசாற்றும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றன.
எகிப்தில் கட்டப்பட்டுள்ள வியக்கத்தக்க கோபுரங்களும், பிரமிட் கூம்பகங்களும் ஒரு புதிரான வரைகணித [Hermetic Geometry] முறையில் திட்டமிட்டுக் கட்டப்பட்டதாகத் தெரிகின்றன! அந்தக் கணித முறை நுணுக்கங்களைப் புரிந்து பண்டைக் காலத்தில் பயன்படுத்திய எகிப்தியர் மிகச் சிலரே.
அவற்றில் நழுவிச் சென்ற சில கணிதத் துணுக்குகளைத்தான் புராதன, அலெக்ஸாண்டிரிய கிரேக்க அறிஞர் கைப்பற்றி விருத்தி செய்ததாக அறிய முடிகிறது. பிரமிடுகளும் அயர்லாந்தில் இருக்கும் கற்சுமைத் தாங்கிகள் [Stonehenge, Ireland] போல கற்தூண் காலங்காட்டியாக[Megalithic Calendars] கருதப்படுகின்றன.
பிரமிட் கட்டிட அமைப்பு:-
23 லட்சம் கற்களால் அமைக்கப்பட்டது கிரேட் பிரமிட். அதன் ஒவ்வொரு கல்லின் எடையும் 2 டன் முதல் 30 டன் வரை இருக்கிறது. இந்தக் கற்கள் ஒன்றொடொன்று பொருத்தப் பட்டிருப்பது அதிசயக்கத் தக்க அளவில் உள்ளது! இவை அரை மில்லி மீட்டர் - அதாவது ஒரு மயிரிழை கூட இடைவெளி இன்றி இருப்பது அதிசயத்திலும் அதிசயமே! இந்தக் கற்களால் 30 எம்பயர் ஸ்டேட் பில்டிங்குகள் கட்டலாம்! பிரமிட் பூமியின் ஸ்கேல் மாடலாக உள்ளது.
இதனுடைய லாடிட்யூட் (Latitude) மற்றும் லாங்கிட்யூட் (longitude) ஆகிய இரண்டும் வெட்டிக் கொள்ளும் இடம் 30 டிகிரி வடக்கு மற்றும் 31 டிகிரி கிழக்கு! இந்த ரேகை மற்ற எல்லா ரேகைகளையும் விட அதிகமாக பூமியின் பரப்பின் வழியே செல்கிறது என்பது இன்னொரு அதிசயம்!
பிரிமிடின் மொத்தக் கற்களின் எடையான ஐம்பத்தி மூன்று லட்சம் டன்னை 1,000,000,000,000,000 (ten to the power of 15) என்ற எண்ணால் பெருக்கினால் பூமியின் எடை கிடைக்கிறது! பிரமிடின் வெவ்வேறு அளவு விகிதாசாரங்கள் ஆங்காங்கே "பை" எனப்படும் 3.142 என்ற அளவையும் தங்க விகிதம் என்று கூறப்படும் 1.618 என்ற அளவையும் காண்பிக்கின்றன.
பிரமிடில் உள்ள கிங் சேம்பரின் தெற்கு மற்றும் வடக்கு முனைகள் முறையே பீடா ஓரியன் நட்சத்திரத்தையும், ஆல்ஃபா டிராகோனி நட்சத்திரத்தையும், க்வீன் சேம்பரின் தெற்கு, மற்றும் வடக்கு முனைகள் முறையே சிரியஸ் நட்சத்திரத்தையும், ஓரியன் நட்சத்திரத்தையும் நோக்கி இருக்கின்றன! நமது புராணங்கள் போற்றும் விஸ்வாமித்திர நட்சத்திரம் தான் சிரியஸ்! இதனுடைய மர்மம் பிரமிட் மர்மத்தை விடப் பெரியது!
பிரிமிடின் அளவுகள்:-
பிரமிட் சக்தியைக் சோதிக்க விரும்புவோர் அதன் அளவுகளை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும். கீழே தந்துள்ள அளவு விவரங்களைக் கவனித்தால் உயரம், அடிப்பக்கம், பக்கஅளவு ஆகியவற்றின் விகிதங்கள் தெரிய வரும்! பிரமிடின் அளவு விபரம் (அனைத்து அளவுகளும் சென்டிமீட்டரில்)