Paristamil Navigation Paristamil advert login

கால்பந்து அளவிலான முட்டையின் மர்மம் விலகியது!

கால்பந்து அளவிலான முட்டையின் மர்மம் விலகியது!

2 ஆடி 2020 வியாழன் 19:41 | பார்வைகள் : 10040


சுமார் 10 பத்து வருடங்களுக்கு முன், அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய முட்டை குறித்த மர்மத்துக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் விடை கண்டறிந்துள்ளனர்.
 
காற்று வெளியேறிய கால்பந்து போன்ற வடிவில் அந்த முட்டை படிமம் குறித்து பல வருடங்களாக அறிய முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறினர்.
 
தற்போது, 68 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெரிய கடல் ஊர்வன உயிரினத்தின் முட்டையாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
 
இதுவே உலகின் மிகப்பெரிய ஊர்வன உயிரினத்தின் முட்டை என நம்பப்படுகிறது. இந்த 'மர்ம முட்டை' சிலி நாட்டில் 2011ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இருப்பினும், 2018ஆம் ஆண்டில்தான் இது காற்று வெளியேறிய ஒரு முட்டை என்பது கண்டறியப்பட்டது.
 
இந்த முட்டையை ஈன்ற உயிரினம் சுமார் 7 மீட்டர் நீளத்திற்கு இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்