Paristamil Navigation Paristamil advert login

முதலைகள் நீர்க்கோழிகள் போல ஓடிய காலம் உண்டு! ஆய்வில் வெளியாகிய தகவல்

முதலைகள் நீர்க்கோழிகள் போல ஓடிய காலம் உண்டு! ஆய்வில் வெளியாகிய தகவல்

13 ஆனி 2020 சனி 12:53 | பார்வைகள் : 9187


பண்டைய காலத்தில் வாழ்ந்த முதலைகள் நீர்க்கோழி போல இரண்டு கால்களுடன் விரைவாக நடந்துள்ளது என கூறும் ஆராய்ச்சி முடிவுகளால் விஞ்ஞானிகள் வியப்படைந்துள்ளனர்.
 
சில முதலைகள் இரண்டு கால்களில் ஓடியிருக்கலாம் என கூறும் ஆராய்ச்சி முடிவுகளை கண்டு விஞ்ஞானிகள் திகைத்துப் போயுள்ளனர்.
 
தென் கொரியாவில் பாதுகாக்கப்பட்ட புதைபடிவ தடங்களை (fossil tracks) ஆராய்ந்ததன் மூலம் இதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
 
110-120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலைகள் குறித்து சர்வதேச குழு ஒன்று ஆராய்ச்சியில் ஈடுபட்டது. முதலைகள் குறித்து நமக்குள்ள புரிதலுக்கு இந்த ஆராய்ச்சி முடிவுகள் பெரும் சவாலாக அமைந்துள்ளன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன.
 
இது குறித்து பேசிய பேராசிரியர் மார்ட்டின் லாக்ளே கூறுகையில், ''பொதுவாக முதலைகள் எந்த செயலும் இல்லாமல், நாள் முழுவதும் சோம்பலாக இருக்கும் என்றே மக்கள் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் முதலைகள் இரண்டு கால்களுடன் சுற்றி வந்தன, நீர்க்கோழி போல ஓடின என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்'' என்றார்.
 
ஆனால் முதலைகள் குறித்து கூறும் இந்த ஆராய்ச்சி முடிவுகளை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஆய்வின் முடிவுகள் பல விவாதங்களுக்கு வழி வகுக்கும்.
 
நீர்க்கோழி போல இரண்டு கால்களில் நடந்ததாக கருதப்படும் பண்டைய முதலைகளின் உடல் மிச்சங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
 
மேலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த பண்டைய கால முதலைகள் நேர் கோட்டில் நடக்கும் திறன் வாய்ந்தது என்றும் பெரும்பாலும் தலை நிமிர்ந்து நடக்கும் தோரணையை கொண்டுள்ளது என்றும் பேராசிரியர் க்யுங் சோ கிம் கூறுகிறார்.
 
மனிதர்கள் நடக்கும்போது பாத சுவடுகள் ஏற்படுவதுபோலவே, இந்த பண்டையகால முதலைகள் நடக்கும்போதும் தெளிவான பாத சுவடுகளை மண்ணில் பதிய செய்யும் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்