Paristamil Navigation Paristamil advert login

நூற்றாண்டை கொண்டாடிய அரிய வகை ஆமை!

நூற்றாண்டை கொண்டாடிய அரிய வகை ஆமை!

4 வைகாசி 2020 திங்கள் 12:44 | பார்வைகள் : 12240


 துருக்கி நாட்டில் ஆமை ஒன்றிற்கு 100வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

 
வடமேற்கு மாநிலமான கோகேலியில் உள்ள மிருக காட்சி சாலையில், அல்தாப்ரா இனத்தை சேர்ந்த வயதான ஆமை ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது.
 
 1920ஆம் ஆண்டு பிறந்த தூகி என்ற அந்த ஆமைக்கு தற்போது 100வயதாகிறது. இதையொட்டி கீரைகள், காய்கறிகளால் தயாரான கேக் மற்றும் பலூன்களுடன் ஆமையின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. 
 
ஊரடங்கு அமலில் உள்ளதால் மிருக காட்சி சாலை மூடப்பட்டுள்ளதால் பார்வையாளர்கள் யாரும் மிருகக் காட்சிசாலையில் அனுமதிக்கப்படவில்லை.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்