பூமிப்பந்தின் வடமுனையில் புதிய நிலம்?
5 புரட்டாசி 2021 ஞாயிறு 11:10 | பார்வைகள் : 9751
பூமிப்பந்தின் ஆக வடக்கில் இருப்பதாக நம்பப்படும் நிலப்பகுதி ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சென்ற மாதம் அங்கு பயணம் மேற்கொண்ட ஆய்வாளர்கள் அந்த நிலத்தைக் கண்டுபிடித்தனர்.
அதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
ஊடாக் (Oodaaq) என்ற பகுதியே உலகின் ஆக வடக்கே உள்ள நிலம் என்று ஆய்வாளர்கள் முன்னர் கருதினர். புவியிடங்காட்டி (GPS) அளித்த தகவலின் படி அவர்கள் அங்கு இருந்ததாகத் தோன்றியது.
ஆனால் உண்மையில் புதிய இடத்தைக் கண்டுபிடித்திருப்பதாக கோப்பன்ஹேகன் பல்கலைக்கழக புவியியல், இயற்கை வளங்கள் நிர்வாகப் பிரிவின் ஆய்வுப் பயணக்குழுத் தலைவர் கூறினார்.
உலகின் வட துருவத்திலிருந்து சுமார் 700 கிலோமீட்டர் தாண்டிய பகுதி ஊடாக். ஆனால், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நிலப்பகுதி வட துருவத்திலிருந்து 780 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது.
ஆனால் அந்த நிலப்பகுதி கடலிலிருந்து 60 மீட்டர் உயரத்தில் மட்டுமே உள்ளது.
கிரீன்லந்தின் வடக்கே இருப்பதாகக் கூறப்படும் அந்த நிலப்பகுதி, விரைவில் கடலில் மூழ்கலாம் என்றும் நம்பப்படுகிறது.