43 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 4 கால்கள் கொண்ட திமிங்கிலங்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!
29 ஆவணி 2021 ஞாயிறு 09:03 | பார்வைகள் : 9908
புதிய திமிங்கில வகை எச்சங்கள்...எகிப்தில் 43 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 4 கால்கள் கொண்ட புதிய திமிங்கில வகையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆம்ஃபிபியஸ் ஃபியோமெசிடஸ் அனுபிஸ் என்கிற உயிரினத்தின் புதை படிமங்கள் எகிப்து நாட்டின் மேற்குப் பகுதியில் இருக்கும் பாலைவனத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.
அந்த உயிரினத்தின் தலை அனுபிஸ் உயிரினத்தை ஒத்து இருக்கிறது. அந்த உயிரினத்துக்கு எகிப்தின் பழங்கால குள்ளநரி தலை கொண்ட மரண கடவுளைத் தொடர்ந்து அந்த உயிரினத்துக்கு அப்பெயர் வைக்கப்பட்டது. இந்த உயிரினங்கள் கடந்த 10 மில்லியன் ஆண்டுகளில் நிலத்தில் வாழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
தோரோயாமாக 600 கிலோ எடை மற்றும் கிட்டத்தட்ட மூன்று மீட்டர் (10 அடி) நீளம் கொண்ட ஃபியோமெசிடஸ் அனுபிஸ் உயிரினம் தன் இரையை வேட்டையாட வலுவான தாடைகளைப் பெற்றிருந்தது என 'தி ப்ரொசீடிங் ஆஃப் தி ராயல் சொசைட்டி பி' என்கிற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டு இருந்தது.
அந்த திமிங்கலத்தால் நிலத்தில் நடக்கவும், நீரில் நீந்தவும் முடிந்து இருக்கிறது. "ஃபியோமெசிடஸ் அனுபிஸ் என்பது ஒரு முக்கியமான புதிய திமிங்கல இனம்.
இந்த கண்டுபிடிப்பு எகிப்து மற்றும் ஆப்பிரிக்காவின் வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்களில் முக்கியமானது" என இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆசிரியரான அப்துல்லா கோஹர் ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.