Paristamil Navigation Paristamil advert login

இன்று உலக நுரையீரல் புற்றுநோய் தினம்

இன்று உலக நுரையீரல் புற்றுநோய் தினம்

1 ஆவணி 2021 ஞாயிறு 10:44 | பார்வைகள் : 12797


உலகம் முழுவதும் இன்று நுரையீரல் புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.

 
மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் உள்ளிட்டவைகளில் இருந்து நுரையீரல் புற்றுநோய் மாறுபட்டு பார்க்கப்படுகிறது. 
 
புகைப் பிடித்தல், பிறர் வெளியேற்றும் புகையிலை புகையை சுவாசிப்பது, போதை வஸ்துகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்துவது போன்ற காரணங்களால் அதிகளவில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
நுரையீரல் புற்றுநோய் வந்தவர்களுக்கு இன்றளவும் முறையான சிகிச்சை முறை இல்லாத காரணத்தால் அந்நோய் வந்தவர்களின் ஆயுட்காலம் 1 ஆண்டுக்குள்ளே நிர்ணயிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். 
 
நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாக மக்கள் வாழ வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்