புற ஊதாகதிர்களைப் பாய்ச்சும் போது நிறத்தை மாற்றும் தேள்கள்..!
25 ஆடி 2021 ஞாயிறு 08:32 | பார்வைகள் : 10242
புற ஊதா கதிர்கள் படும்போது தேள்கள் தங்களின் நிறத்தை ஒளிரச் செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் போது, ஏராளமான குட்டிகளை தனது முதுகில் சுமந்திருந்த பழுப்புத் தேளின் மீது புற ஊதாக் கதிர்களை செலுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தேள் தனது நிறத்தை நீல பச்சை நிறமாகவும், அதன் குட்டிகள் பிரகாசமான ஊதா நிறத்திலும் தங்களை ஒளிரச் செய்தன. இதற்கு தேள்களின் உடலில் உள்ள புரதச் சத்துகளே காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேள்களின் இந்தப் பண்பு, மற்ற உயிரினங்கள் இரைதேடி வரும்போது, அவற்றைக் குழப்புவதற்காக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் ஊகித்துள்ளனர்.