சவுதி பாடத்திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம்! – புதுமை புகுத்தும் இளவரசர்!
24 சித்திரை 2021 சனி 07:40 | பார்வைகள் : 9548
சவுதி அரேபிய அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வரும் இளவசர் முகமது பின் சல்மானின் திட்டப்படி பாடத்திட்டத்தில் இந்திய புராண, இதிகாசங்கள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் விஷன் 2030 என்ற திட்டத்தின் கீழ் நாட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அதன்படி சவுதி மாணவர்கள் பல்வேறு நாட்டின் கலாச்சாரம், புராண, இதிகாசங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்தியாவிலிருந்து பௌத்தம், இந்துத்துவம், ராமயணம், மகாபாரதம் உள்ளிட்டவையும் அந்த பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.