மலக் கழிவின் மூலம் வீடுகளுக்கு வெப்பமளிக்க முடியுமா?

14 பங்குனி 2021 ஞாயிறு 06:04 | பார்வைகள் : 13246
மனித மலக் கழிவின் வழி வீடுகளுக்கு வெப்பமளிக்கும் திட்டம்...
அத்திட்டத்தைத் தொடங்கவுள்ளது லண்டனில் ஒரு வட்டாரம்!
அது குறித்து The Guardian செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
தேம்ஸ் வாட்டர் (Thames Water) எனும் தண்ணீர்ச் சுத்திகரிப்பு நிறுவனம், அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மனிதக் கழிவுகளைச் சுத்திகரிக்கும் நடைமுறையின்போது உருவாகும் வெப்பநீரை, 2,000 புதிய வீடுகளுக்கு வெப்பமூட்டப் பயன்படும் வெந்நீரோடு கலப்பதன் மூலம் அது சாத்தியமாகும்.
கழிவுகளை இயற்கை எரிசக்திக்கு மாற்றும் அந்தத் திட்டத்தின்மூலம், அடுத்த 30 ஆண்டுகளில் வெளியேறக்கூடிய 105-ஆயிரம் டன் அளவுள்ள கரியமில வாயுவைத் தவிர்க்கமுடியும் என்று The Guardian குறிப்பிட்டது.
இப்போது அந்த வீடுகளுக்கு எரிவாயு மூலம், வெப்பம் வழங்கப்படுகிறது.