Paristamil Navigation Paristamil advert login

இரட்டைத் தலையுடன் அரிய வகை ஆமை கண்டுபிடிப்பு!

இரட்டைத் தலையுடன் அரிய வகை ஆமை கண்டுபிடிப்பு!

12 வைகாசி 2019 ஞாயிறு 16:18 | பார்வைகள் : 3545


தாய்லாந்தில் இரட்டைத் தலையுடன் அரிய வகை ஆமை ஒன்று பிறந்துள்ளது.
 
தாய்லாந்து தலைநகர் போங்கொக்கைச் சேர்ந்த நூன் அவ்ஸானி என்கிற பெண் தனது வீட்டில் ஆமை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.
 
இந்த ஆமை அண்மையில் முட்டைகளை இட்டு, குஞ்சு பொறித்தது. அதில் ஒன்று ‘அல்பினோ’ எனப்படும் நிறம் அற்றதாகவும், இரு தலைகள் கொண்டதாகவும் அபூர்வப் பிறவியாகப் பிறந்தது.
 
நூன் அவ்ஸானியிடம் இருக்கும் அந்த அரியவகை ஆமை குறித்து, சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.
 
இதை கேள்விப்பட்ட ஏராளமானோர் நூன் அவ்ஸானி வீட்டுக்கு சென்று அந்த ஆமையை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்