பிரமிடுகளின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட 4,500 ஆண்டுப் பழைமையான இடுகாடு!
6 வைகாசி 2019 திங்கள் 12:14 | பார்வைகள் : 3257
கீஸா பிரமிடுகளின் அருகே வண்ணச்சாயம் பூசப்பட்ட சவப்பெட்டிகளும் சுண்ணாம்புக் கல்லால் ஆன சிற்பங்களும் இடுகாடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளில் ஆகப் பழைமையானது கி.மு. 2,500 ஆண்டில் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.
கல்லறையில் சவப்பெட்டிகள் மட்டுமல்லாமல் விலங்குகள், மனிதர்களின் சிற்பங்கள் இருந்தன. கல்லறையின் சுவர்களில் வாசகங்களும் பதிக்கப்பட்டுள்ளன.
கல்லறையில் இருந்த இரு சடலங்கள் அக்காலத்தில் அரசாங்க உயர் பதவிகளில் இருந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
ஏழாம் நூற்றாண்டில் அந்த இடுகாடு பரவலாகப் பயன்படுத்தப்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.