செயற்கை நுண்ணறிவு - நன்மையா தீமையா?
1 சித்திரை 2019 திங்கள் 16:05 | பார்வைகள் : 10588
மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவின் மூலம் நோய்களின் அறிகுறிகளைக் கண்டறியும் முறையை ஆய்வாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.
அதன் மூலம் மருத்துவர்கள் நோயாளிகளை இன்னும் துல்லியமாகப் பரிசோதனை செய்ய முடியும். செலவும் குறைவு.
இருப்பினும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மின்னிலக்க தரவுகள் மூலம் பெறப்படும் விவரங்கள் மாற்றப்பட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் 'Science' சஞ்சிகையில் குறிப்பிட்டனர்.
இணைய ஊடுருவல் ஏற்பட்டால் நோயாளிகள் தவறாகப் பரிசோதிக்கப்படும் அபாயம் இருப்பதையும் அவர்கள் சுட்டுகின்றனர்.