அரிய பொருள்களை விரும்பும் குணம் எப்போது தொடங்குகிறது? ஆய்வு வெளியிட்ட தகவல்
22 பங்குனி 2019 வெள்ளி 15:43 | பார்வைகள் : 9392
குழந்தைகள் எளிதில் கிடைக்கும் பொருள்களை விட அரிதான பொருள்களையே விரும்புவதாக பிரிட்டனின் வார்விக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அரிதான பொருள்கள் கிடைப்பது கடினம் என்பதால் பிள்ளைகள் அவற்றை அதிகம் விரும்புகின்றனர். இந்தப் பழக்கம் ஒருவருக்கு 6 வயதிலேயே தொடங்குகிறதாம்.
4-இலிருந்து 6 வயதிற்குட்பட்ட 60 பிள்ளைகளிடமும் 16 மனிதக்குரங்குகளிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
குழந்தைகளிடையே பரவலாக இருக்கும் அந்தப் பண்புகள் மனிதக்குரங்குகளிடம் தென்படவில்லை என்பதை ஆய்வு காட்டியது.
எளிதில் கிடைக்காத ஒரு பொருளைப் பெறுவதே மனிதர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தங்களிடம் இருக்கும் அரிய பொருளை மற்றவர்களிடம் காட்டி மகிழும் குணம் பலருக்கு நிறையவே இருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது.
ஒருவரை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டுவதில் ஒருவகைப் பெருமிதத்தையும் அது ஏற்படுத்துகிறது. 1980களிலும் 90களிலும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது தெரியவந்துள்ளது.
வார்விக் பல்கலைக்கழக ஆய்வில் பங்கெடுத்த பிள்ளைகளில் பெரும்பாலோர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள்.