சமூக ஊடகங்களால் பதின்ம வயதுப் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம்!

18 பங்குனி 2019 திங்கள் 17:48 | பார்வைகள் : 11978
சமூக ஊடகங்களால் பதின்ம வயதுப் பெண்கள், அந்த வயது ஆண்களைவிட இரண்டு மடங்கு பாதிக்கப்படுகிறார்கள் என்று பிரிட்டன் ஆய்வு ஒன்று கூறுகிறது.
இணையத் தளங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் பதின்ம வயதுப் பெண்கள் தாழ்வு மனப்பான்மை, அச்சுறுத்தல்கள், உடல் தோற்றம், குறைந்த தூக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதாக ஆய்வு குறிப்பிட்டது.
ஆய்வில் கிட்டத்தட்ட 11,000 பதின்ம வயதினர் கலந்துகொண்டனர்.
14 வயதுடைய பெண்கள் அதிகமாகச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதும், ஐந்து பேரில் இருவர் சமூக ஊடகங்களில் 3 மணி நேரத்திற்கு மேல் செலவிடுவதும் ஆய்வில் தெரியவந்தது.
அதன் மூலம் அவர்கள் எளிதில் மனஅழுத்தம், பதற்றம் போன்றவற்றால் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளதாகக் கூறப்பட்டது.
பதின்ம வயது ஆடவர்கள் தாழ்வு மனப்பான்மை, உடல் தோற்றம் பற்றிய கவலைகளால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.