உலகின் ஆக வேகமான விலங்கு எறும்பா?
12 பங்குனி 2019 செவ்வாய் 14:34 | பார்வைகள் : 9494
டிராக்குலா வகை எறும்பு, உலகின் ஆக வேகமான விலங்காக இருக்கலாம் என்று "THE NEW YORK TIMES" நாளேடு தெரிவித்துள்ளது.
ஓர் எறும்பு எப்படி வேகமான விலங்காக இருக்க முடியும்?
வேகமான விலங்கு எது என்பதைக் கணக்கிட விலங்குகளின் உடல் அசைவுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
அதன் அடிப்படையில் டிராக்குலா எறும்பின் தாடை அசைவு தான் அதை உலகின் ஆக வேகமான விலங்காக மாற்றியுள்ளது.
அந்த எறும்புகளின் தாடைகள் கிட்டத்தட்ட மணிக்கு 321.8 கிலோமீட்டர் வேகத்தில் அசையும் சக்தி கொண்டவை.
மனிதர்கள் கண் சிமிட்டும் நேரத்தை விட அந்த எறும்புகளின் தாடைகள் 5,000 முறை வேகமாக அசையும்.
டிராக்குலா எறும்புகள் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா ஆகிய இடங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.
அந்த எறும்புகள் பொதுவாக மரத்திற்கு அடியில் தான் வாழுமாம்.
டிராக்குலா எறும்புகளின் தாடை அசைவுகளைக் கொண்டு தற்போது பொறியாளர்கள் மேலும் சக்திவாய்ந்த, திறன்வாய்ந்த இயந்திரங்களை வடிவமைப்பது பற்றி ஆய்வு செய்து வருவதாகக் கூறப்பட்டது.