கண்ணாடி போத்தல்களால் என்ன பயன்?
8 பங்குனி 2019 வெள்ளி 17:35 | பார்வைகள் : 9317
பிளாஸ்டிக் பொருள்களைத் தடைசெய்யவும், அவற்றின் பயன்பாட்டைக் குறைக்கவும் பல நாடுகள் தற்போது தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
அன்றாட வாழ்க்கையில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களில் போத்தல்களும் ஒன்று.
பிளாஸ்டிக் போத்தல்களுக்கு பதிலாக கண்ணாடி போத்தல்களைப் பயன்படுத்துவது பலவகைகளிலும் நன்மை தரக்கூடியது.
பிளாஸ்டிக் போத்தல்களில் இருந்து கண்ணாடி போத்தல்கள் எவ்வாறு மாறுபடுகின்றன ?
1. கண்ணாடி போத்தல்களில் இருக்கும் தண்ணீரின் சுவை இயற்கையாக இருக்கும். ஆனால் பிளாஸ்டிக் போத்தல்களில் இருக்கும் நீரின் சுவை சற்று வித்தியாசமாக இருக்கும்.
2. கண்ணாடி போத்தல்களில் இருக்கும் வேதிப்பொருள் உடலுக்குக் கேடு விளைவிக்காது. ஆனால் பிளாஸ்டிக் போத்தல்களில் இருக்கும் ரசாயனங்களால் உடல் நலத்துக்குக் கேடுவிளையக்கூடும்.
3. கண்ணாடிப் பொருள்களை மறுபயனீடு செய்வதால் அது மறுபடியும் கண்ணாடிப் பொருளாகவே உருமாறும். ஆனால் பிளாஸ்டிக் பொருள்களைத் தீங்கின்றி மறுபயனீடு செய்வது அவ்வளவு எளிதல்ல. பிளாஸ்டிக்கை மறுபயனீடு செய்யும் ஒவ்வொரு முறையும் அதன் தரம் குறைகிறது.
4.கண்ணாடி போத்தல்களை எளிதில் சுத்தம் செய்யலாம், அவற்றிலுள்ள அழுக்கையும் எளிதில் கண்டறிந்து தவிர்த்துவிடமுடியும்.
5. கண்ணாடிப் பொருள்களால்சுற்றுப்புறத் தூய்மைக்கேட்டையும் கட்டுக்குள் கொண்டுவரலாம்.
6. கண்ணாடி போத்தல்கள் காண்பதற்கு வசீகரமானவை என்பதோடு நமது இனிய பழைய நினைவுகளைக் கிளறிவிடும் ஆற்றலும் அவற்றுக்கு உண்டு.