வரிக்குதிரைகளுக்கு ஏன் உடல் முழுதும் வரிகள்?
28 மாசி 2019 வியாழன் 08:25 | பார்வைகள் : 9189
வரிக்குதிரைகளுக்கு ஏன் உடல் முழுதும் வரிகள் என்பது விஞ்ஞானிகளின் கேள்விப் பட்டியலில் இதுவும் ஒன்று.
நூற்றாண்டு காலமாக விடை தெரியாமல் தலையை உடைத்துக்கொண்டிருந்த அவர்கள் ஒரு வினோத ஆராய்ச்சியில் குதித்துள்ளனர்.
சார்ல்ஸ் டார்வின், ஏல்ஃப்ரட் ரஸல் வாலஸ் ஆகியோரின் கூற்றுப்படி பெரிய விலங்குகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கவே இயற்கை அவற்றுக்குத் தடிமமான கோடுகளைக் கொடுத்திருக்கிறதாம்.
மரணத்தை விளைவிக்கும் நோயைப் பரப்பும் பூச்சிகளைத் துரத்தவே வரிக்குதிரைகளுக்கு வரிகள் வந்திருக்கலாம் என்பது அண்மைய அறிவியல் கண்டுபிடிப்பு.
அதை நிரூபிக்க பிரிட்டனின் பண்ணையொன்றில் குதிரைகள் சில வரிக்குதிரையைப்போல் வேடம் பூண்டன.
வரிகளைக்கொண்ட போர்வையைப் போர்த்திய அந்தக் குதிரைகளை நெருங்கிய விஷப்பூச்சிகள் குதிரைகளின்மீது அமரவில்லை!
காரணம் குதிரைகளின்மீதுள்ள வரிகள் பூச்சிகளின் பார்வையைக் கலங்கடிக்கின்றன...
விஞ்ஞானிகளின் இத்தனை நாள் ஆராய்ச்சி வீண்போகவில்லை என்றே தோன்றுகிறது.