உலர்சலவை என்றால் என்னவென்று தெரியுமா?

23 மாசி 2019 சனி 17:53 | பார்வைகள் : 12393
பட்டுப் புடவையில் உணவு சிந்தி கறை ஏற்பட்டால் என்ன செய்வது? தண்ணீரால் சேலையைச் சுத்தம் செய்து கறையை அகற்ற முடியாது. புடவை பாழாகிவிடும்.
அதைச் சுத்தம் செய்ய ஒரே வழி உலர்சலவை முறை. அதற்கு ஆங்கிலத்தில் dry cleaning என்று பெயர்.
உலர்சலவை முறையில் தண்ணீர் இல்லாமல் மற்ற திரவங்கள் கொண்டு துணிகள் சுத்தம் செய்யப்படும்.
உலர்சலவை முறை, பிரான்ஸில் 1855ஆம் ஆண்டில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜான் பாப்டிஸ்ட் ஜொலி (Jean Baptiste Jolly) என்பவரின் வீட்டில், மேசைத் துணிமீது மண்ணெண்ணெய் தற்செயலாக ஊற்றப்பட்டது.
மண்ணெண்ணெய் ஊற்றப்பட்ட இடம் பிறகு கறைகளில்லாமல் சுத்தமானதைத் தொடர்ந்து மண்ணெண்ணெய்யைப் பயன்படுத்தி துணிகளைச் சுத்தம் செய்யலாம் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது.
உலர்சலவை முறையில், கறைகளை அகற்றுவதற்குப் பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்ற திரவங்கள் ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்டன.
அப்போது, எரிவாயுத் திரவம் பயன்படுத்தப்பட்டதால் உலர்சலவை வர்த்தகங்கள் ஆபத்தானவையாகக் கருதப்பட்டன.
ஆனால், நாளடைவில் கறைகளை அகற்றுவதற்காகப் பாதுகாப்பான திரவங்கள் பயன்படுத்தப்பட்டன.
உலர்சலவை செயல்முறை:
முதலில், உலர்சலவைக் கடையில் கொடுக்கப்படும் துணிகளில் உள்ள கறைகள் முழுமையாகச் சோதனை செய்யப்படும். காணாமல்போன பொத்தான்களும் கிழிந்துபோன துணிகளும் இருக்கின்றனவா என்பது சோதிக்கப்படும்.
பின்னர் சுத்தம் செய்யும் முறை தொடங்கும்.
துணிகளில் கறைகளைத் தேடிக் கண்டுபிடித்து அதன் பின்னர் அவற்றை அகற்ற முயற்சி எடுக்கப்படும். இது கறைகளை முழுமையாக அகற்றாது. ஆனால், அந்த முறையை எளிமைப்படுத்தும்.
அதன் பிறகு, இயந்திரத்தில் துணிகள் போடப்படும். இந்தக் கட்டத்தில் கறைகளை முழுமையாக அகற்ற கரையக் கூடிய திரவம் பயன்படுத்தப்படும்.
கறைகள் அகற்றப்பட்ட பின்னர், துணிகள் இஸ்திரி பெட்டியால் அழுத்தப்பட்டு வாடிக்கையாளர்களுக்குத் திருப்பிக்கொடுக்கப்படும்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1