Paristamil Navigation Paristamil advert login

கணினி விளையாட்டு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி ஆய்வு அறிக்கை!

கணினி விளையாட்டு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி ஆய்வு அறிக்கை!

15 மாசி 2019 வெள்ளி 17:22 | பார்வைகள் : 9269


வன்முறைக் காட்சிகளைக் கொண்ட கணினி விளையாட்டுகளை விளையாடுவதால் வன்முறையான பழக்க வழக்கங்கள் ஏற்படக்கூடும் என்ற பரவலான நம்பிக்கையை மறுத்துள்ளனர் பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.
 
ஆக்ஸ்ஃபர்ட் (Oxford), கார்டிஃப் (Cardiff) பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் 1,000 இளையர்களிடமும் அவர்களுடைய பெற்றோரிடமும் நடத்திய ஆய்வின் முடிவு இது.
 
எவ்வளவு நேரம் கணினி விளையாட்டுகள் விளையாடுகிறார்கள், எத்தகைய கணினி விளையாட்டுகளை அவர்கள் விளையாடுகிறார்கள் என்ற கேள்விகளுக்குப் பதின்ம வயதினர் பதிலளித்தனர்.
 
கணினி விளையாட்டுகள் விளையாடுவதால் அவர்களுடைய பழக்க வழக்கங்களில் கூடுதல் வன்முறை தென்படுகின்றதா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.
 
பெற்றோரும் பிள்ளைகளும் வழங்கிய பதில்கள், வன்முறையான விளையாட்டுகளுக்கும் வன்முறைப் பழக்கவழக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதைப் புலப்படுத்தவில்லை என்றனர் ஆய்வாளர்கள்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்