குடும்ப வன்முறையைக் கண்டறிய உதவும் கதிரியக்க மருத்துவர்கள்!
10 மாசி 2019 ஞாயிறு 14:13 | பார்வைகள் : 9154
கதிரியக்க மருத்துவர்கள் (radiologists) குடும்ப வன்முறையைக் கண்டறிய உதவக்கூடும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நோயாளிகளிடம் கதிரியக்க மருத்துவர்கள் அதிகம் உரையாட மாட்டார்கள். இருப்பினும் அவர்கள் பாதிக்கப்பட்டோரின் காயங்களை ஆராயும்போது, எத்தகைய துன்புறுத்தலுக்கு இலக்காகியுள்ளனர் என்பதை அடையாளங்காண முடியும்.
அவர்கள் ஊடுகதிர் (X-ray) சோதனையின் மூலம் அதனைக் கண்டறிகின்றனர்.
பெண்களுக்குப் பொதுவாக முகம், மண்டை ஓடு, கை ஆகிய பகுதிகளில் முறிவுகள் ஏற்படுவது அதிகம்.
ஆஸ்துமா, நாட்பட்ட நோய், தற்கொலை முயற்சி ஆகிய பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோரில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
போஸ்டனில் (Boston) உள்ள Brigham and Women's மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.